Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    காட்சி காணும் போதுள்ள நிலைமை

    விஷேசமாய் மிஸிஸ் உவைட் தமது வேலையை ஆரம்பித்த துவக்கத்தில் அவருக்குத் தரிசனகள் அடிக்கடி பல சாட்சிகள் சமூகத்தில் அளிக்கப்பட்ட காலங்களில் அவர் தம்மைச் சுற்றியுள்ள பூமியின் காரியங்களுக்கு முழுவதும் உணர்ச்சியற்றவராகவே இருந்தார். என்றாலும் அவர் தாம் பார்த்த காட்சிகளை விஸ்தரிக்கையில் விரும்பப்படத்தக்க கைக் கோரணி செய்து கொண்டு அடிக்கடி இங்குமங்கும் உலாவிக்கொண்டிருப்பார். அப்படிப்பட்ட சமயங்களில் அவருடைய பெலம் அபூர்வ மாற்ற மடைந்திருந்தது. பெலசாலிகள் அவருடைய கரத்தையோ அல்லது புயத்தையோ இது இருந்த இடத்தை விட்டு அசைக்கப் பிரயாசப்பட்டும் அவர்களால் முடியாமற் போயிற்று. ஓர் சமயம் அவர் தமது சொந்த வீட்டிலிருக்கையில், குடும்ப உபயோகமாயிருந்த உத்தேசம் பதினெட்டு ராத்தல் நிறையுள்ள பெரிய வேதாகமம் ஒன்றை மேஜையிலிருந்து எடுத்து அதைத் தமது இடது கரத்தினால் பிடித்துக்கொண்டு அரையைச் சுற்றி உலாவினார். சாதாரண பெலத்தோடிருக்கையில் அவர் இப்பளுவான புத்தகத்தை கையிலெடுக்க முதலாய்க் கஷ்டப்பட்டிருப்பார்; ஆனால் காட்சியின் உன்னத பெலம் பெற்றிருக்கையில் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக அவர் அதை நீட்டின கையில் ஏந்திப் பிடித்துக்கொண்டிருந்தார்.LST 107.3

    மிஸிஸ். உவைட் தமது காட்சிகளைக் சொல்லுகையில் தமக்குப் போதித்த ஆளைக் குறித்து “என்னுடன் வந்த தூதன்” அல்லது “என் போதன்” அல்லது “என் வழிகாட்டி” என்று அடிக்கடி பேசினார். இவ்வார்த்தைகளினால் அவர் தமக்கு எப்பொழுதும் வழி காட்டியாய் அல்லது போதகனாயிருந்த ஜோதியுள்ள, மகிமையான ஓர் தூதனைக் குறிப்பிட்டார்.LST 108.1

    மிஸிஸ். உவைட் அடிக்கடி பேசின போதிலும் அவருடைய உதடுகளிலிருந்து சுவாசம் வந்ததில்லை. 1854, ஜூன் 26-ல் நியூயார்க்கிலுள்ள ரோச் சென்டரில் அவர் காட்சியிலிருக்கையில் இரண்டு வைத்தியர்கள் அவருடைய சுவாசாயத்தில் சுவாசம் இருக்கவேண்டுமென்று காட்டப் பிரயாசப்பட்டார்கள். பல பரீட்சைகள் பார்த்ததில் கொளுத்தப்பட்ட மெழுகுவர்த்தி எயக் கொண்டு கூடுமான வரையில் அவருடைய உதடுகளைச் சுட்டுப் போடதப் படிக்கு அதை அவருடைய உதடுகளுக்கருகில் கொண்டு பிடித்துப் பார்த்தார்கள்; என்றாலும், அவர் அச்சமயம் பலமாய்ப் பேசினப் போதிலும் சுவாலை அசையவில்லை.LST 108.2

    அவர் தரிசனத்திலிருந்து வெளியேறினார் என்பதற்கு முதல் அடையாளம் ஆழ்ந்த மூச்சு வாங்குவதே. அடுத்த மூச்சு வாங்குவதற்குள் ஒரு வேளை பல வினாடிகள் செல்லும். அப்படி சில நீண்ட மூச்சுகள் வாங்கின பிறகு அவர் சாதாரணமாய்ச் சுவாசிக்க ஆரம்பிப்பார்.LST 108.3

    தானியேல் தீர்க்கதரிசியின் புஸ்தகம் பத்தாம் அதிகாரத்தில் எழுதியிருக்கிறபடி அவர் தரிசனத்திலிருக்கையில் அடைந்த அனு போகங்களுக்கு இந்தச் சரீர நிலைமைகள் ஒத்திருக்கின்றன. அவர் பெலனற்றுப் போனதாகவும் ஓர் தூதன் தோன்றி உன்னத பெல மளிப்பதாகவும் அவர் சொல்லுகிறார். “இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை. அப்பொழுது மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு என்னைத் திடப்படுத்தினான் என்றார்.” தானி 10:17,18.LST 108.4

    என்றாலும் அத்தகைய அபூர்வ தேவக் காட்சிகளுங் கூட பொல்லாங்கனின் வல்லமைக் குட்பட்ட ஒருவனால் செய்யப்பட கூடுமென்பதை நாம் அறிய வேண்டும். அவர்கள் மட்டற்ற வல்லமையையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்திக் காட்டினாலும், அவர்களுடைய கிரியை ஏற்றுக் கொள்ளப் படுமுன்னதாக அல்லது தள்ளப் படுமுன்னதாக, அது பின்னும் அதன் கனிகளினால் சோதிக்கப் பட வேண்டும்.LST 109.1