Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First

  சகோதரரிடம் இருந்து வந்த தைரியம்

  இவ்வித நிர்பந்த நிலைமைக்கு உள்ளான என் மன வ்யாகூலன்களைக் குறித்து போர்த்லாந்தில் உள்ள விசுவாசிகளின் கூட்ட்டதார் யாதொன்றும் அறியாது இருந்தனர்; அனால் எத் ஒரு காரணத்தி னிமித்தம் என் மனம் சோர்வுற்றதேன்றும் கர்த்தர் தம்மை எனக்கு வெளிப்படுத்தின கிருபை உள்ள விதத்தை கவனிக்கையில் இப்படி இருப்பதானது எனக்கு பாவமாகும் என்றும் கண்டார்கள். என் தந்தை வீட்டில் கூட்டங்கள் நடத்தப் பட்டும் என் மன வ்யாகூலத்தினால் சில காலமாக நான் அக்கூட்டங்களுக்கு போக வில்லை. நான் அடைந்த ஆத்மா வேதனையை தாங்க கூடாத படிக்கு என் பாரம் அவ்வளவு பெரிதாயித்று.LST 61.6

  கடைசியாக என் சொந்த வீட்டில் நடைபெற்ற கூட்டங்கள் ஒன்றுக்கு ஆஜராயிருக்கும்படி ஏவப்பட்டேன். எனக்காக சபையில் ஒரு விசேஷ விண்ணப்பம் செய்யப் பட்டது. என் முந்தின அனுபோகத்தில் எனக்கு அருளப்பட்ட தேவ வல்லமையின் வெளிப்படுத்தல்களுக்கு நேர் விரோதமாய் இருந்த தகப்பனார் பியர்சன் இப்பொழுது எனக்காக ஊக்கமாய் மன்றாடி கர்த்தரின் சித்தத்திற்கு என் சித்தத்தை ஒப்புக் கொடுக்கும்படி எனக்கு ஆலோசனை சொன்னார். உருக்குமுள்ள ஒரு தந்தையை போல் என்னை தைரியப் படுத்தி எனக்கு ஆறுதல் அளிக்க பிரயாசப்பட்டதும் அன்றி பாவிகளின் நேசரால் நான் கைவிடப் படவில்லை என்பதை நான் நம்ப வேண்டும் என்றும் சொன்னார்.LST 62.1

  நான் எனக்கென்று யாதாமொரு விசேஷ முயற்சியும் செய்ய கூடாமல் அவ்வளவு அதிக பலவீனமும் சோர்வுமாயிருந்தேன்; என்றாலும் என் உள்ளம் என் சிநேகிதர்களின் விண்ணப்பத்திற்கு இசைந்து இருந்தது. உலகத்தின் எதிர்புக்கு இஞ்சிதும் நான் கவலைப் படாமல் தேவ தயவு மாத்திரம் எனக்கு திரும்பவும் கிடைக்குமாகில் எவ்வித தியாகம் செய்வதற்கும் மனபூர்வமாயிருந்தேன்.LST 62.2

  தூதைக் கொண்டு போக கர்த்தர் எனக்கு பலமும் தைரியமும் அருளும்படி எனக்காக விண்ணப்பம் செய்யப்பட்ட போது என்னைச் சுற்றி மூடியிருந்த அக் கனத்த இருள் விலகவும், பளிச் என்று ஓர் வெளிச்சம் என் மேல் உதித்தது. அக்கினி பந்து போல் காணப்பட்ட ஒரு பொருள் நேரே என் நெஞ்சின் மேல் பட்டது. நான் பலமற்று பொய் தரையில் விழுந்தேன். உடனே தேவ தூதர்களின் சமூகத்திலே இருப்பதாய்க் காணப்பட்டது. “நான் உனக்கு வெளிப்படுத்தி இருக்கிறவைகளை மற்றவர்களுக்கு தெரிவி” என்று அத்தூதர்களில் ஒருவன் திரும்பவும் கூறினான்.LST 62.3

  வாதத்தின் நிமித்தம் முலன்கால்படியிடக் கூடாதிருந்த பியர்சன் தகப்பனார் இச்சமபவத்தை கண்ணுற்றிருந்தார். நான் திரும்பவும் நன்றாய்ப் பார்க்கவும் கேட்கவும் தக்க பலமடைந்தும் அவர் தமது ஆசனத்திலிருந்து எழுந்து, நான் காண்பேனென எதிர்பாராததோர் காட்சியை நான் கண்டேன். அக்கினி பந்தொன்று பரலோகத்தில் இருந்து இறங்கி வந்து சகோதரி எலன் ஹார்மனின் நெஞ்சின் மேல் மோதினது. நான் அதைக் கண்டேன்! நான் அதைக் கண்டேன்! அதை நான் ஒருபோதும் மறக்க முடியாது. அது என்னை முழுவது மாய் மாறிவிட்டது. எலன் சகோதரியே, கர்த்தருக்குள் தைரியமாயிரு. இவ்விரவிற்கு பின் நான் இனி ஒருபோதும் சந்தேகப்பட்டேன். இனி நாங்கள் உனக்குச் சகாயாம்செய்து உன்னை தைரியப் படுத்துவோம்” என்று சொன்னார்.LST 62.4