Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ஆசார அலங்காரம்

    கிறிஸ்துவுக்கு ஊழியஞ் செய்கிறவர்கள் நேர்மையுள்ளவர்களும் நம்பப்படத்தக்கவர்களுமாயிருப்பதோடு, ஒழுங்கா விஷயத்தில் கல்மலையைப் போல் உருதியுள்ளவர்களாயும் அதே சமயம் பட்சமும் இணக்கமுமுள்ளவர்களாயிருக்க வேண்டும். ஆசாரம் ஆவியின் இலட்சணங்களில் ஒன்று. மானிட மனசை நடத்துங் காரியமே காரியமே மனுஷருக்குக் கொடுக்கப்பட்ட காரியங்களிலெல்லாம் மிக்க பெரிய காரியம். இதயங்களை அடைய விரும்புகிறவன், “மன உருக்கமுள்ளவர்களும் இணக்கமுள்ளவர்களுமா” யிருங்கள் என்னும் கட்டளைக்குச் செவி கொடுக்க வேண்டும். நியாய வாதம் செய்து முடிக்கத் தவறினதை அன்பு செய்து முடிக்கும். ஆனால் ஓர் நிமிஷ வேடுவெடுப்பும், கடுமையான ஒரு உத்தரமும், அற்ப விஷயத்தில் ஏற்படும் குறைவும் கிறிஸ்தவ மரியாதைக் குறைவும் ஆசாரக் குறைவும் தோழமை, செல்வாக்கு ஆகிய இரண்டையும் கெடுத்துவிட நேரிடலாம்.LST 215.1

    கிறிஸ்து இப் பூமியில் இருந்த பிரகாரம் கிறிஸ்தவ ஊழியன் இருக்கப் பிரயாசப்பட வேண்டும். அவருடைய மாசற்ற சுத்தத்தில் மாத்திரமல்ல, அவருடைய பொறுமை, சாந்தம் முதலானவைகளிலும் அவர் நமக்கு முன்மாதிரியானவர். உண்மையான ஆசாரத்திற்கு அவருடைய ஜீவியம் நமக்கு ஓர் திருஷ்டாந்தமாயிருக்கிறது. வறுமைப்பட்டவர்களுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் அவர் எப்பொழுதும் பட்சமான பார்வையும் ஆறுதலான வார்த்தையும் உடையவராயிருந்தார். அவருடைய பிரசன்னம் வீட்டில் சுத்த ஆகாயத்தைக் கொண்டு வந்தது. சமூக வாழ்க்கைகளுக்குள் அவருடைய ஜீவியம் புளித்த மாவைப் போல் கிரியை செய்தது. சுத்தமுள்ளவராகவும் கறைப்படாதவராகவும் நிர்விசாரிகள், மூர்க்கர், ஆசாரங் கெட்டவர்கள், அநீதியுள்ள ஆயக்காரர்கள், துன்மார்க்கரான சமாரியர், அஞ்ஞான போர்வீரர், அநாகரீகமுள்ள நாட்டுப்புறத்தார், கலப்புள்ள திரள் கூட்டத்தினர் முதலான ஜனங்களுக்குள் அவர் சஞ்சரித்தார்.LST 215.2

    குணத்தில் கடினமும் கரடுமானவை எவையோ அவற்றை இயேசுவின் மார்க்கம் மெதுப்படுத்துகிறதுமன்றி, ஒழுக்கத்தில் முரடும் காட்டமுமானவை எவையோ அவற்றையும் அது சாந்தப்படுத்துகிறது. அது சாந்தமான வார்த்தைகளையும் மெச்சத்தக்க ஒழுக்கத்தையும் உண்டாக்குகிறது. சுத்தத்தையும் நேர்மையையும் பற்றிய உயர்ந்த அறிவை எவ்விதம் மகிழ்ச்சியின் குணத்தோடு இணைப்பது என்பதை நாம் கிறிஸ்துவிடமிருந்து கற்போமாக. பட்சமும் ஆசாரமு முள்ள ஓர் கிறிஸ்தவன் கிறிஸ்து மார்க்கத்திற்கனுகூலமான மிக்க பலத்த ஆதாரமாயிருக்கிறான்.LST 215.3

    நீ பழகும்படி கொண்டுவரப்படுகிற சிலர் அநாகரீகமும் அநாச்சாரமுமுள்ளவர்களாயிருக்கலாம்; இதினிமித்தம் நீ உன் ஆசாரத்தில் குறைவுள்ளவனாயிருக்கலாகாது. தன் சொந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புகிற எவனும் மற்றவர்களுடைய மரியாதையை அநாவசியமாய்க் குலைக்காதபடி ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். சுத்த மழுங்கனும், பெருந் தப்பு செய்கிறவனுமானவன் விஷயத்திலும் இச் சட்டம் பரிசுத்தமாய் ஆசாரிக்கப்பட வேண்டும். நம்பிக்கையற்றவர்கள் போல் தோன்றும் இவர்கள் விஷயமாய்த் தேவன் என்ன செய்யச் சித்தமுள்ளவராயிருக்கிறார் என்பது உனக்குத் தெரியாது. அவர் கடந்த காலங்களில் தமக்கென்று பெரிய வேலை செய்யும்படிக்கு அவ்வளவு நம்பிக்கையுள்ளவர்களாய் அல்லது மனோகரமானவர்களாய் தோன்றாதவர்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார். அவருடைய ஆவி இருதயத்தில் கிரியை செய்யும் போது அவர் ஒவ்வொரு கருவியையும் தரியக் கிரியை செய்வதற்கு தூண்டி விடுகிறார். ஆண்டவர் கரடுமுரடானதும் செப்பனிடப்படாததுமானஇக் கற்களில் புயலுக்கும் உஷ்ணத்துக்கும் பாரத்துக்கும் அசையாமல் நிற்கத்தக்க அருமையான பொருளைக் கண்டார்.LST 216.1

    கிறிஸ்து மார்க்கம் ஒரு மனுஷனை மேன்மகனாக்கும். கிறிஸ்து தம்மைத் துன்பப்படுத்தினவர்களிடத்திலும் மரியாதையுள்ளவராயிருந்தார்; அவருடைய மெய்யடியார்களும் அதே ஆவியைக் காண்பிப்பார்கள். உலகில் சகஜமாயுள்ள ஒப்பாசாரத்தை சுவிசேஷம் மெச்சாமல், இருதயத்தின் மெய்யன்பிலிருந்து சுரக்கிற ஆசாரத்தையே அது மெச்சிக் கொள்கிறது.LST 216.2

    சுயம் மேலான பொருளாகக் கருதப்படுமளவும் மெய்யான நாகரீகம் ஒரு போதும் வெளிப்படாது. அன்பு இருதயத்தில் வாசஞ் செய்ய வேண்டும். ஓர் உத்தம கிறிஸ்தவன் தன் ஆண்டவரைப் பற்றிய உள்ளான அன்பிலிருந்தே தன் செய்கையின் உள் நோக்கங்களை எடுக்கிறான். அன்பு தன்னையுடையவனுக்கு கிருபையையும், நேர்மையையும், நடக்கையின் அழகையும் அளிக்கிறது. அது முகத்தைப் பிரகாசிக்கிறது, சத்தத்தை அமரப்பண்ணுகிறது; அது அவனை முழுவதுமாகச் செம்மைப்படுத்தி சீர்படுத்துகிறது.---G.W. 121-3.LST 216.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents