Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    விசுவாசத்தினால் உண்டாகும் நீதி

    அடுத்த கோடையில் என் பெற்றோர் என்னைக் கூட்டிக் கொண்டு மெயின் நாட்டிலுள்ள பாக்ஸ்டனில் நடந்த மெதடிஸ்டு பாளையக் கூட்டத்திற்குச் சென்றார்கள். நான் அங்கே கர்த்தரை ஊக்கமைத் தேடவும், கூடுமானால் என் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளவும் வேண்டுமென்பது என் பூரணத் தீர்மானம். விசுவாசத்தினாலுண்டாகும் கிறிஸ்தவ நம்பிக்கைக்காகவும் சமாதானத்திற்காகவும் என் உள்ளத்தில் பெரிய வாஞ்சையுண்டாயிருந்தது.LST 14.2

    “ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன், நான் செத்தாலும் சாகிறேன்” என்னும் வார்த்தைகளின் பேரில் செய்யப்பட ஓர் பிரசங்கத்தை நான் கேட்கையில் எனக்கு மிகுந்த தைரியம் ஏற்பட்டது. நம்பிக்கைக்கும் நடுக்கத்திற்கும் நடுவில் ஆடிக்கொண்டிருப்போரைக் குறித்து, அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு க்ர்சிதுவின் மன்னிக்கும் அன்பைப் பெற விரும்பியும், விழுந்து விடுவோம் என்னும் பயத்தினாலும் வெட்கத்தினாலும் இன்னும் சந்தேகத்தினாலும் அடிமைத்தனத்தினாலும் இருக்கிறார்கள் என்பதாய்ப் பேசினவர் குறிப்பிட்டார். அப்படிப்பட்டவர்கள் தங்களைத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவும் தாமதமின்றி உடனே அவருடைய கிருபையை நம்பவும் வேண்டுமென்று அவர்களுக்கு புத்தி சொன்னார். ஆகாஸ்வேரு தன தயவிற்கடையாளமாக எஸ்தருக்குப் பொற்செங்கோலை நீட்டினது போல் கிருபையுள்ள இரட்சகர் இரக்கத்தின் செங்கோலை அவர்களுக்கு நீட்ட ஆயத்தமாயிருப்பதை அவர்கள் காண்பார்கள். கர்த்தரின் சமுகத்தில் நாடு நடுங்கிக் கொண்டிருக்கும் பாவியானவன் செய்ய வேண்டியதெல்லாம் விசுவாசத்தின் கரத்தை நீட்டி அவருடைய கிருபையின் செங்கோலைத் தொட வேண்டியது தன். உடனே அவனுக்கு மன்னிப்பும் சமாதானமும் உறுதியாகிறது. தேவ தயவைப் பெறுவதற்கு அவருடைய வாக்குத் தத்தங்களை உரிமை பாராட்டும் முன், தங்களை இன்னும் அதிகப் பாதிரவான்களாக்கிக் கொள்ள வேண்டுமென்று எவர்கள் காத்திருந்தார்களோ, அவர்கள் பெரும் தப்பிதம் செய்கிறவர்களாயிருக்கிறார்கள். இயேசு மாத்திரம் பாவத்தினின்று சுத்திகரிக்கிறார்; அவர் தான் நமது மீறுதல்களை மன்னிக்கக் கூடும், விசுவாசத்துடன் நம்மிடம் வருவோரின் விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் கேட்டுப் பதளிலளிப்பதாக அவர் வாக்களித்திருக்கிறார். அநேகர் தேவ தயவைப் பெறுவதற்கு ஏதோ சில முயற்சிகள் எடுக்க வேண்டுமென்னும் வீணான எண்ணமும் உடையவர்களாய் இருக்கின்றார்கள். ஆனால் சுய நம்பிக்கை எல்லாம் வியர்த்தமே. விசுவாசத்தின் மூலமாய் இயேசுவோடு ஐக்கியப்பட்டிருப்பதினால் மாத்திரம் பாவியானவன் விசுவாசமுள்ள தேவனுடைய பிள்ளையாகிறான்.LST 14.3

    இவ் வார்த்தைகள் என்னைத் தேற்றிதனதுமன்றி இரட்சிக்கப் படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டுமென்பதையும் தெரிவித்தன.LST 15.1

    நான் இப்போது செய்ய வேண்டியதென்ன என்பதைத் தெளிவாய்க் கண்டதும் இருள் விலக ஆரம்பித்தது. நான் என் பாவ மன்னிப்பை ஊக்கமாய்த் தேடவும் என்னை முழுவதுமாய்க் கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்கவும் பிரயாசப்பட்டேன். தேவன் என்னை ஏற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக இருக்குமென நான் எண்ணின அந்த ஆத்தும பரவச அநுபோகத்தை நான் அடையாமற் போனதினால் என் மனதுக்கு அப்படி பெரிய கலக்கமாயிருந்தது. அதை அடையாமல் நான் குணப்பட்டு விட்டேனென்று என்னையே நான் நம்பிக் கொள்ளத் துணியவில்லை. சுத்த விசுவாசத்தைக் குறித்து நான் எவ்வளவாய்ப் போதனையடைய வேண்டியிருந்தது.LST 15.2