Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நமது நலத்திற்காக

    தமது காரியத்தை ஆதரிப்பதற்காகத் தேவன் மனுஷன் பேரில் சார்ந்து இருக்கிறவரல்ல. பொக்கிஷ சாலைக்கு நேரே பரத்திலிருந்து பொருளை அனுப்பிக் கொடுக்கிறது மனுஷனுக்கு நலமென்று அவர் கண்டிருந்தால் அப்படியே அவர் செய்திருக்கக் கூடும். மனுஷர் சகாயமின்றி தேவ தூதரை அனுப்பி உலகத்திற்கு சத்தியத்தைக் கூறி அறிவிக்கக் கூடிய வழிகளை அவர் கண்டுபிடித்திருக்கலாம். வானங்களில் சத்தியத்தை எழுதி, தமது கட்டளைகளை அது உயிருள்ள அட்சரங்களால் உலகத்திற்கு அறிவிக்கும்படி அவர் செய்திருக்கலாம். எந்த மனுஷனுடைய பொன்னையாகிலும் அல்லது வெள்ளியை ஆகிலும் அவர் நம்ப வேண்டியதில்லை. “சகல காட்டு ஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.” “நான் பசியாய் இருந்தால் உனக்குச் சொல்லேன்: பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே” சங். 50:10,12. என்று அவர் சொல்லுகிறார். தேவனுடைய வேலையை முன்னேற்றம் செய்வதில் நமது கைப்பட வேண்டியதவசியம் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அதை அவர் நமது நலத்தைக் கருதியே கட்டளை இட்டிருக்கிறார். நம்மை அவர் தம்மோடு ஒத்துழைக்கச் செய்கிறதனால் அவர் நம்மை மகிமைப் படுத்தியிருக்கிறார். மனுஷர் தயாள குணமுள்ளவர்களாய் இருக்கும் பொருட்டு அவர்களும் ஒத்துழைப்பது அவசியமென்று அவர் கட்டளை இடுகிறார்.LST 182.4

    அளவற்ற ஐசுவரியம் உடையவராயிருக்கும் நமது நிமித்தம் தரித்திரரான அவருடைய சாயலுக்கு கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் ஒப்பானவர்களாகவும் பொருட்டு அவர்கள் தங்கள் பொருளையும் பெலத்தையும் செலவு செய்யும்படி ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டுமென்று முயற்சிக்க வேண்டுமென்று அழிந்து போன உலகத்தின் சன்மார்க்க அந்தகாரம் அவர்களை கெஞ்சிக் கேட்கிறது. --- 3T 387-91.LST 183.1

    * * * * *

    வேலை எங்கே எல்லாம் நல்ல அஸ்திபாரத்தின் மேல் ஸ்தாபிக்கப் பட்டிருக்கிறதோ அந்த இடங்களிலுள்ள விசுவாசிகள் முற்காலங்களில் தங்கள் இடத்தின் வேலைக்காகக் கொடுக்கப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையுமோ அல்லது அதில் ஓர் பாகத்தையாகிலுமோ மாற்றிக் கொடுப்பதினால் தங்களுக்குப் பெரிய கஷ்டமாயிருந்தாலும் அதைக் கவனியாமல் ஆபத்திலிருப்போருக்கு உதவி செய்ய வேண்டியது தங்கள் கடமை என்பதை உணர வேண்டும். இவ்விதம் அவருடைய வேலை வளர வேண்டுமென்பது ஆண்டவருடைய சித்தம். இதுவே சரியான முறைப்படி நஷ்டந் தீர்க்கும் பிரமாணமாம். ---- & T 170.LST 183.2

    * * * * *

    நன்றியறிதலுள்ள அன்பினால் உண்டாகும் பக்தியும் தயாள குணமும் அற்பமான காணிக்கையாகிய, மனப்பூர்வமான பலிக்கு திவ்விய வாசனை அளித்து அதை மதிக்கப்படாத ஈவாக்குகிறது. ------ 3 T 397.LST 183.3

    * * * * *

    பரிசுத்த ஸ்தலத்தின் திராசுகளில் கிறிஸ்துவிலுள்ள அன்பினால் கொடுக்கப்படும் ஏழைகளின் காணிக்கைகள் கொடுக்கப்படுகிற தொகையின்படி எண்ணப்படாமல் அந்தத் தியாகத்தைச் செய்யும் படித் தூண்டுகிற அன்பின்படி எண்ணப்படுகின்றன. ---- 3 T 398-9.LST 183.4

    * * * * *