Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First

  தேவனோடு அடைபடல்

  சாத்தானின் எதிர்ப்புகள் பலமாயிருக்கின்றன; அவன் வஞ்சகங்கள் கொடியவைகள்; ஆயினும் கர்த்தரின் கண் அவருடைய ஜனங்கள் மேல் இருக்கிறது. அவர்கள் உபத்திரவம் பெரிது, அக்கினிச்சூளையின் ஜுவாலைகள் அவர்களை எரித்துப் போடுமாப்போற்தோன்றுகிறது, ஆனால் அக்கினியில் புடமிடப்பட்ட பொன்னைப்போல் இயேசு அவர்களை கொண்டுவருவார். கிறிஸ்துவின் சாயல் பூரணமாய்ப் பிரதி பிம்பிக்கும் பொருட்டு அவர்களில் படிந்துள்ள களிம்பு நீக்கப் பட வேண்டும். அவநம்பிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்; விசுவாசம், நம்பிக்கை, பொறுமை ஸ்திரப்பட வேண்டும்.LST 131.1

  தேவனுடைய ஜனங்கள் தங்கள் ஆத்துமாக்களை அவருக்கு முன்பாகத் தாழ்த்தி, இருதய சுத்தத்திற்காகக் கெஞ்சும்போது, “அவர்கள் மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்து போடுங்கள்” என்னும் கட்டளை கொடுக்கப் படுகிறதுமன்றி “பார், நான் உங்கள் அக்கிரமங்களை உங்களிலிருந்து நீங்கச்செய்து உங்களுக்கு சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்” என்னும் தைரியமான வார்த்தைகளும் அருளப்படுகின்றன. புடமிடப்பட்டும் சோதிக்கப்பட்டும் உண்மையுள்ளவர்களாய் விளங்கும் தேவனுடைய பிள்ளைகளின்மேல் கிறிஸ்துவின் ரீதியாகிய கறையற்ற அங்கி போடப்படுகிறது. நிந்திக்கப்பட்ட மீதியானவர்கள் இனி ஒருபோதும் உலகக் கறைகளினால் தீட்டுப்படாமல் மகிமையான ஆடை அணியப்பெற்றிருப்பார்கள்.LST 131.2

  சகல யுகங்களிலுமுள்ள உண்மையுள்ளவர்களோடு அவர்களுடய நாமங்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கும். வஞ்சகனின் வஞ்சகங்களை அவர்கள் எதிர்த்தார்கள்; வலுசர்ப்பத்தின் கெர்ச்சிப்பினால் அவர்கள் தங்கள் உத்தமத்தை விட்டு விலகவில்லை, இப்பொழுது அவர்கள் சோதனைக்காரனின் உபாயங்களுக்கெல்லாம் நித்தியமாய் விலகிப் பத்திரமா இருகிறார்கள். அவர்கள் பாவங்கள் பாவத்துக்குக் காரணமா இருந்தவனிடம் மாற்றப்பட்டாயிற்று. மீதியானவர்கள் மன்னிக்கப்பட்டு எற்றுக்கொள்ளப்பட்டதுந் தவிர மகிமைப் படுத்தப்பட்டுமிருக்கிறார்கள். அவர்கள் சிரசின்மேல் “சுத்தமான பாகை” வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தேவனுக்கென்று ராஜாக்களும் ஆசாரியர்களுமாயிருப்பார்கள்.LST 131.3

  சாத்தான் குற்றஞ்சாட்டி இக்கூட்டத்தை அழிக்க வகை தேடிக் கொண்டிருக்கும் சமயம், காணப்படாத பரிசுத்த தூதர்கள் இங்குமங்கும் சென்று ஜீவனுள்ள தேவனின் முத்திரையை அவர்கள் மேல் வைத்தார்கள். தங்கள் நெற்றிகளில் பிதாவின் நாமம் எழுதப்பட்டவர்களாய்ஆட்டுக்குட்டியானவரோடு சீயோன் மலையில் நிற்பவர்கள் இவர்கள் தான். பூமியிலிருந்து மீட்கப்பட்டவர்களாகிய இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரைத் தவிர வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்த புதிய பாட்டை அவர்கள் சிங்காசனத்திற்கு முன்னின்று பாடுகிறார்கள், “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுகுட்டி யானவர்களுக்கும் முதற் பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.”LST 132.1

  “இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோகவானே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்காந்திருக்கிற ய்=உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர். இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்” என்னும் அந்தத் தூதனுடைய வார்த்தைகள் இப்பொழுதுதான் பூரணமாய் நிறைவேறுகிறது. கிறிஸ்து தமது ஜனங்களை மீட்டு இரட்சிக்கிறவராக வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறார். தியானவர்களுக்கு அவர்களுடைய அரதேச பரதேச வாழ்விலே உண்டான கண்ணீர்களும் நிந்தனைகளும் தேவனுக்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் சந்தோஷமாகவும் மகிமையாகவும் மாறிப்போகவே அவர்கள் இப்பொழுது மெய்யாகவே “அடையாளமாயிருக்கிற புருஷ” ராயிருக்கிறார்கள். “இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும், மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும். சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்த ஜீவனுக்கென்று பேரெழுதப் பட்டவன் எவனும் பரிசுத்தனென்று சொல்லபடுவான்.” LST 132.2

  ஓர் ஜனமாக நாம் உலக மீட்பர் நின்றது போல் நிற்க வேண்டும். மோசேயின் சரீரத்தைக் குறித்து கிறிஸ்து சாத்தானுடனே தர்கித்துப் பேசின போது அவர் அவனை தூஷித்துக் குற்றப்படுதத் துணியவில்லை. இப்படிச்செய்ய முன்னொரு விஷயத்திலும் அவரைக் கோபப்படுத்தி இருந்தான்; பதிலுக்கு பதில் செய்யும் ஆவியை அவன் கிறிஸ்துவில் எழுப்பிவிடக் கூடாததினால் விசனமடைந்தவனானான். இயேசுவினால் செய்யப்பட்டதை எல்லாம் சாத்தான் தப்பர்த்தப் படுவதற்காயத்தமாய் இருந்தான்; அதற்கு இரட்சகர் அவனுக்கு கொஞ்சமும் இடமாகிலும் நியாயா பாசமாகிலும் கொடுக்கவில்லை. சாத்தானுடைய திருகல் முறுகளையும் ஜாலங்களையும் பின்பற்றும்படிக்கு அவர் தமது நேரான சத்திய வழியை விட்டு விலகமாட்டார். - 9T.239.40.LST 132.3

  * * * * *