Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தசமபாகத்தின் சரியான உபயோகம்

    ஊழியன் போதனையினாலும் சாதனையினாலும் ஜனங்கள் தசமபாகத்தை பரிசுத்தமாய் மதிக்கும்படி போதிக்க வேண்டும். தான் ஒரு ஊழியனாய் இருக்கிறபடியால் அதை வைத்துக் கொண்டு தனது சொந்த இஷ்டத்திற்கு அதைப் பிரயோகிக்கக் கூடுமென்பதாக அவன் எண்ணலாகாது. அது அவனுடையதல்ல. அவன் அதைத் தன்னுடையதென்று நினைத்து அதை தனக்கென்று செலவழிக்கிறதற்கு அவனுக்கு அதிகாரம் கிடையாது. தேவனுக்கென்று தத்தம் செய்யப்பட்ட தசமபாகங்கள், காணிக்கைகளின் நியாயமான பிரயோகத்தை விட்டு வேறு எவ்விதமாயும் அவைகளைப் பிரயோகிப்பதற்கு அவன் தூண்டுதலாயிருக்கக் கூடாது. அவைகளை அவருடைய பொக்கிஷ சாலையில் அவர் நியமித்திருக்கும் ஊழியத்திற்காகப் பரிசுத்தமாய் வைத்துக்கொள்ளவேண்டும்.LST 219.2

    நமது ஜனங்களுக்கென்று வெகு தெளிவும் திட்டமுமானதோர் தூது எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தசமபாகங்களை எடுத்து பல விஷயங்களுக்குச் செலவிடுகிற விஷயத்தில் அவர்கள் ஓர் தப்பிதம் செய்கிறார்கள் என்பதை அவர்களுக்குச் சொல்லும்படி நான் கற்பிக்கப்பட்டேன். அவ்விஷயங்கள் தங்கள் மட்டில் நன்மையானவைகளாய் இருந்தாலும் அவ்விஷயங்களுக்கு தசமபாகத்தைச் செலவிடும்படி ஆண்டவர் சொல்லவில்லை. இவ்விதம் தசமபாகத்தைப் பிரயோகிக்கிறவர்கள் கர்த்தரின் ஒழுங்கை விட்டு விலகிப் போகிறவர்களா யிருக்கிறார்கள். இவைகளைக் குறித்து தேவன் நியாயம் விசாரிப்பார்.LST 219.3

    பள்ளிக்கூட நோக்கங்களுக்காகத் தசமபாகம் உபயோகிக்கப்படலாமென ஒருவர் யோசிக்கிறார். இன்னும் மற்றவர்கள் புத்தக விற்பனை செய்யும்கான் வாசர்களும் கோல்போட்டர்களும் தசமபாகத்தினால் ஆதரிக்கப் படலாமென்கிறார்கள். ஆனால் ஊழியர்களை ஆதரிப்பதற்காக உபயோகப்பட்டு வரும் தசமபாகத்தை வேறு விதமாய் உபயோகிக்கும்போது பெரிய தப்பிதமாகும். இக்காலத்தில் ஒரே ஒரு ஊழியன் இருக்கப்பட்ட இடத்தில் மிக்க சாமார்த்தியமுள்ள ஊழியர் நூறு பேர் இருக்க வேண்டும். ---G.W. 225-6.LST 220.1