Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First
  Larger font
  Smaller font
  Copy
  Print
  Contents

  எழுவதும் பிரயாணம் போவதும்

  நியூ யார்க்கில் உள்ள ரோசெச்டரில் இருந்து மீன் இல் உள்ள பங்கோர் மட்டும் இரண்டு மாதங்களுக்கு நாங்கள் வெளியே போய் வேலை செய்ய வேண்டியிருந்தது. நாங்கள் சார்லி எனப்பட்ட எங்கள் நலல் குதிரையை எங்கள் பெட்டி வண்டியில் பூட்டி இப்ப்ரயாணம் செய்ய வேண்டும். அக்குதிரையை வேர்மாண்டில் உள்ள சகோதரர் எங்களுக்குக் கொடுத்தார்கள். ஆனால் பிள்ளையை மோசகரமான இந்நிலையில் நாங்கள் விட்டுப்போவதேப்படி என்று யோசித்து, அதற்கு அதிக கேவலமனதொன்றும் நேரிடாதிருந்தால் புறப்படலாமென்று தீர்மானித்தோம். நாங்கள் நியமித்திருந்த முதல் இடத்திற்கு போக வேண்டுமானால் இன்னும் இரண்டு நாட்களில் நாங்கள் புறப்பட வேண்டும். பிள்ளைக்கு பசி தீபனம் ஏற்பட்டால் அதை நாங்கள் ஒரு அத்தாட்சியாகக் கொண்டு புறப்பட துணிவோம் என்று கர்த்தரிடம் காரியத்தை ஒப்புவிதோம். முதலாம் நாளில் குணமான மாறுதல் ஒன்றும் இல்லை. அவன் சிறிதளவு ஆகாரமும் உட்கொள்ளவில்லை. அடுத்த பகல் மத்தியானத்திற்கு மேல் அவன் சூப்பு வேண்டுமென்று கேட்டதும் அதைக் கொடுத்து போஷித்தோம்.LST 71.1

  நாங்கள் அதே சாயங்காலம் புறப்பட ஆரம்பித்தோம். சாயங்காலம் சுமார் நாலு மணிக்கு நோய்பட்ட அந்த பிள்ளையை ஒரு தளியணையின் மேல் வைத்துக் கொண்டு நாங்கள் இருபது மைல் சவாரி செய்தோம். அன்றிரவு அவன் அதிக அலுப்பாய் காணப்பட்டான். அவனுக்கு நித்திரை வர வில்லை. ஆகையினால் நான் அவனை ஏறக்குறைய இரவெல்லாம் என் கரங்களில் ஏந்தி வைத்துக் கொண்டிருந்தேன்.LST 71.2

  அடுத்த நாள் காலையில் ரோசெஸ்டர் திரும்புவதா அல்லது நேரே போவதா என்று இருவரும் சேர்ந்து ஆலோசித்தோம். நாங்கள் நேரே போகும் பட்சத்தில் பிள்ளையை வழியில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதை எங்களை உபசரித்த குடும்பத்தினர் சொன்னார்கள், தோற்றமெல்லாம் அப்படியே தான் இருந்தது. அனால் நான் ரோசெச்டருக்கு திரும்புவதற்கு துணியவில்லை. பிள்ளையை உபத்திரவப் படுத்தி எங்கள் பயணத்தை தடுப்பதற்கு சாத்தான் வேலை செய்தான் என்று நாங்கள் நம்பினோம். ஆகவே நாங்கள் அவனுக்கு இடம் கொடுக்க வில்லை. நான் என் புருஷனை நோக்கி, “நாம் திரும்புகிறதாயிருந்தால், பிள்ளை மரித்துப்போம். நாம் நேரே போவோமானால் அவன் பிழைத்துக் கொள்வான். கர்த்தரை நம்பி நாம் பிரயாணம் செய்வோமாக” என்றேன்.LST 71.3

  இன்னும் இரு தினங்களில் நாங்கள் சுமார் நூறு மைல் தூரம் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது, என்றாலும் இக்கஷ்டகாலத்தில் கர்த்தர் எங்களுக்கு துணை செய்வார் என்று நாங்கள் நம்பினோம். நான் மிகவும் களைப்புற்று இருந்ததினால் தூக்கத்தில் பிள்ளை பை கைகளில் இருந்து தவற விட்டு விடுவேனோ என்று பயந்திருந்தேன். ஆகையினால் நான் அவனை என் மடியில் வைத்து என் இடுப்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டு நாங்கள் இருவரும் அன்று பிரயாணத்தில் அதிக நேரம் தூங்கினோம். பிள்ளாய் பிரயாணம் முழுவதும் பலனடைந்து சீராய் இருந்தது. நாங்கள் அவனை முழுவதும் கம்பளியால் மூடிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.LST 72.1

  வெர்மாண்டுக்கு போன எங்கள் பிரயாணத்தை கர்த்தர் அதிகமாய் ஆசிர்வதித்தார். என் புருஷன் அதிக வேலையும் கவலையுமாய் இருந்தார். கூட்டங்களில் எல்லாம் அவரே அதிகமாய் பிரசங்கிக்கிறதும், புஸ்தகங்கள் விற்பனை செய்கிறதும், பத்திரிக்கையை பிரபலபடுத்து வதற்கும் உழைக்கிறதுமாய் இருந்தார். ஓரிடத்தில் கூட்டம் முடிந்ததும் அடுத்த இடம் தீவிரித்துச் செல்வோம். மத்தியானத்தில் ரஸ்தாப் பக்கம் குதிரைக்குத் தீனி போட்டு விட்டு நாங்கள் சாப்பிடுவோம். பிறகு என் புருஷன் போஜனப் பெட்டி மூடியின் மேலாகிலும் அல்லது தமது தொப்பியின் மேலாகிலும் எழுத்துக் காகிதத்தை வைத்துக் கொண்டு ரிவியு, இன்ஸ்ட்ரக்டர் முதலிய பத்திரிக்கைகளுக்கு வியாசங்கள் எழுதுவார்.LST 72.2

  * * * * *

  Larger font
  Smaller font
  Copy
  Print
  Contents