Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    உதவி செய்கிறதிற்கு பிள்ளைகளைப் பயிற்றுவியுங்கள்

    எல்லாரும் வேலை செய்யலாம். சிலர், “என் வீட்டூர் வேலைகளையும் என் பிள்ளைகளையும் பார்ப்பதிலேயே என் நேரமும் பெலமும் போகிறது” என்று சாக்குச் சொல்லுகிறார்கள். பெற்றோரே ஆண்டவருக்கு வேலை செய்கிறதிற்காக உங்கள் பிள்ளைகள உங்கள் பெலத்தையும் சாமர்த்தியத்தையும் அதிகரிக்கச் செய்கிறவர்களாய் உங்களுக்குக் கைகொடுக்க வேண்டும். சிறு பிள்ளைகள் கர்த்தருடைய குடும்பத்தைச் சேர்ந்த சிறய அவயங்களாய் இருக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தேவனுக்குப் பிரதிஷ்டை செய்யும்படி நடத்தப் படவேண்டும். சிருஷ்டிப்பினாலும் மீட்பினாலும் அவர்கள் அவருடையவர்கள். அவர்களுடைய சரீர, மனோ, ஆத்துமா சக்திகள் எல்லாம் அவருடையவைகள் என்று அவர்களுக்குப் போதிக்க வேண்டும். வெவ்வேறு போங்கான தன்னயமற்ற ஊழியத்தில் உதவி செய்யும்படி அவர்கள் பயிற்றுவிக்கப் பட வேண்டும். உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு இடையூறாயிருக்க விடாதீர்கள். பிள்ளைகள் உங்களோடு சரீர பாரங்களை மாத்திரமல்ல ஆவிக்குரிய பாரங்களையும் சுமக்கிறதில் பங்கடைய வேண்டும். பிறருக்கு உதவி செய்கிறதினால் அவர்களுடைய சொந்த சந்தோஷமும் உபயோகமும் அதிகமாகிறது. --- 7 T. 62-3.LST 175.1

    சபையின் ஜீவியத்தினால் உலகம் உணர்த்தப் படுகிறதுபோல பிரசங்க பீடபோதனையினால் அது அவ்வளவாய் உணர்த்தப் படுகிறதில்லை. பிரசங்கி சுவேஷத்தை உபதேசமாய்க் கூறுகிறார். ஆனால் சபையின் பக்தியுள்ள ஜீவியம் அதின் வல்லமையை வெளிப்படுத்துகிறது, --- 6 T. 62-3.LST 175.2

    தன்னயமுள்ள நோக்கங்களினாலும், பிடிவாதம், பொறாமையினாலும் எழும்பும் எதிர்ப்புகள் நமக்குன்டாகும்; ஆயினும் பயமற்ற தைரியத்தோடும் உயிருள்ள விசுவாசத்தோடும் நீர் வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் நாம் விதை விதைக்க வேண்டும். ----- 3 T. 406.LST 175.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents