Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    சபையின் கடைசி வெற்றி

    நமது சொந்த சம்பூரணத்தின் சாயலை அவர்கள் உலகத்திற்குக் காண்பிக்கும் படியாகவும், பூலோக சட்டங்களை விட மேலான சட்டங்களையுடைய இன்னொரு உலகமாகிய அந்த நித்தி உலகத்தை நித்தியமாய்க் காண்பிக்கும் ஓர் பாவனையாக தமது சபை தமக்குள்ள பூரனமாயிருக்கும் படியாகவும் கர்த்தர் அதற்கு வல்லமையையும் ஆசீர்வாதங்களையும் அருளிச் செய்திருக்கிறார். அவருடைய சபை தெய்வீக சாயலின் படி கட்டப்பட்ட ஓர் தேவாலயமாயிருக்க வேண்டும்; ஒவ்வொரு கல்லும் தெய்வீக அளவின்படி வெட்டப்பட்டு செம்மையாக்கப்படும்படியாகவும், நீதியின் சூரியனுடைய பிரகாசமும் தெளிவுள்ள கதிர்களை வீசுகிற ஓர் பரம அடையாளமாக பிரகாசிக்கும்படி மெதுக் கொடுக்கும்படி யாகவும் பரம சிற்பாசாரி பரத்திலிருந்து தம்முடைய போன் அளவு கொலைக் கொண்டு வந்திருக்கிறார். சபை பரம மன்னாவினால் போஷிக்கப்பட்டு அவருடைய கிருபையின் பாதுகாப்புக்கே கீழ்ப்பட்டிருக்க வேண்டும். அது பூரண வெளிச்சமும் நீதியுமாகிய ஆயுதம் தரித்து தன கடைசிப் போருக்குள் பிரவேசிக்கிறது. ஆகாத வஸ்துவாகிய களிம்பு பட்சிக்கப்பட்டுப் போம், சத்தியத்தின் வல்லமையோ பரிசுத்தப்படுத்தி, மேன்மைப் படுத்தும் தன சிறந்த குணத்தைக் குறித்து உலகத்திற்கு சாட்சி பகருகிறது.LST 197.1

    கர்த்தராகிய இயேசு தமது இரக்கத்தையும் ஏராளமான கிருபையையும் கொண்டு மனிதருடைய இருதயங்களில் பரீட்சைகள் செய்கிறார். அவர் எவ்வளவோ அதிசய மறுரூப மாறுதல்களை உண்டாக்குகிறார்! தேவனுக்கு விரோதமாகவும் அவருடைய ஆளுகையின் சட்டங்களுக்கு விரோதமாகவும் சாத்தான் எவ்வளவோ விண்ணானங்கள் பேசின போதிலும், எவ்வளவோ பொல்லாத கட்டுப்பாடான கூட்டங்களைச் சேர்த்துக்கொண்டபோதிலும், அவர்கள் தன புரட்டுகளுக்கும் வஞ்சகங்களுக்கும் அசையாதிருக்கும் ஒரு அரண்போலிருக்கிரதைப் பார்த்து அவன் பிரமித்து நிற்கிறான். அவர்கள் அவனுக்கு விளங்காத ஓர் இரகசியமாயிருக்கிறான். விழுந்துபோன மனிதர், ஒரு தடவை கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தவர்கள். கிறிஸ்துவின் பயிற்சி மூலமாய் பரலோக ஆட்சிகளிலும் இன்பங்களிலும் விசேஷ பங்கெடுத்துச் செய்யும் படிக்கான தேவ குமாரரும் குமாரத்திகளுமாகத் தக்கதாக தெய்வீக சாயலின் இனிய குணா லட்சணங்களை விருத்தி செய்கின்றனரே என தேவ தூதர்களும், சேராபீங்களும், கேரூபீன்களும், மானிட தூதர்களோடு ஒத்துழைக்கக் கட்டளைபெற்ற அதிகாரங்களும் பிரமித்து மகிழ்வடைகின்றன.LST 197.2

    மீட்கப்பட்டதும் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டதுமான தமது சொத்தினால் தமக்கு ஏராளமான மகிமையின் வருமானம் கிடைக்கும் பொருட்டு கிறிஸ்து தமது சபைக்கு எவ்வளவோ கிருபைகளை அளித் திருக்கிறார். சபைக்கு கிறிஸ்துவின் நீதியளிக்கப் பட்டிருப்பதினால் அது அவருடைய களஞ்சியமாயிருக்கிறது; அதில் அவருடைய இரக்கம், அன்பு, கிருபையாகிய ஐசுவாரியங்கள் சம்பூரணமாய்க் காணப் படவேண்டும். அவர் மன்றாடின மன்றாட்டில் ஒரே பேறான குமாரனாகிய தம்மிடத்தில் பித்த எவ்வளவாய் அன்பு கூறுகிறாரோ அவ்வளவாய் நம்மிடத்திலும் அன்பு கூறுகிறார் என்றும், அவர் எங்கே இருக்கிறாரோ அங்கே நாமும் கிறிஸ்துவோடும் பிதவோடும் என்றென்றைக்கும் ஒன்றாயிருப்போமென்றும் அவர் சொன்ன அந்த விஷயம் பரம சேனைக்கு ஓர் அதிசயமாயிருக்கிறது மன்றி, அது அவர்களுடைய பெருஞ் சந்தோஷமாயு மிருக்கிறது.LST 197.3

    நிறைவும் பூரணமுமான அவருடைய பரிசுத்த ஆவியின் வரமும் சபைக்கு ஒரு அக்கினிக் கோட்டை போல் இருக்க வேண்டும், பாதாள வல்லமைகள் அதை மேற்கொள்வதில்லை. கறையற்ற அவர்களுடைய பரிசுத்தத்திலும் மாசற்ற சம்பூரணத்திலும் கிறிஸ்து தமது ஜனங்களை ஹ்டமது சகல பாடுகளுக்கும் தமது நிந்திக்கும் தமது அன்புக்கும் தக்க பலனாகவும் தமது மகிமையின் நிறைவாகவும் எண்ணுகிறார். - Christian Experiences and Teachings 208-9.LST 198.1

    * * * * *

    தேவன் தமது ஜனங்களை எழுப்புவார்; மற்ற எத்துக்கள் தவறும் பட்சத்தில் மார்க்க பேசங்கள் அவர்களுக்குள் நுழைந்து அவர்களைப் புடைத்து, கோதுமையிலிருந்து பரதரப் பிரித்து விடும். - 5 T 707.LST 198.2

    * * * * *

    சபை தேவனுடைய அரணாயும், அவருடைய அடைக்கலப் பட்டணமாயும் இருக்கிறது, அதை அவர் இக்கலக உலகில் வைத்திருக்கிறார். A. A. 11.LST 198.3

    * * * * *

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents