Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ஒழுக்க நடை

    பரிசுத்த காரியங்களைக் கையாடுகிறவர்களுக்கு, “கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே...உங்களைச் சுத்திகரியுங்கள்” என்னும் பக்தி விநயமான கட்டளை வருகிறது. (ஏசா. 52:11.) சகல மனுஷரிலும் கர்த்தரால் நம்பப்பட்டு மகிமைப்படுத்தப்படுகிறவர்கள், விசீஹா ஊழியம் செய்யும்படி கொடுத்து வைக்கப்பட்டிருக்கிறவர்கள் வாக்கிலும் செய்கையிலும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அவ ர்கள் பக்தியுள்ள மனுஷரும், நீதியின் கிரியைகளினாலும் சுத்தமும் உண்மையுமான வார்த்தைகளினாலும் தங்கள் உடன் மனிதரை மேலான நிலைக்கு உயர்த்தக் கூடியவர்களும் , கடந்து போகும் ஒவ்வொரு சோதனைக்கும் அசையாதிருக்கிற மனுஷரும், கிறிஸ்துவண்டை ஆத்துமாக்களைச் சேர்க்க வேண்டுமென்னும் உன்னத நோக்கமுடையவர்களுமாயிருக்க வேண்டும்.LST 216.4

    சாத்தான் தன் விசேஷ சோதனைகளைக் கொண்டு ஊழியத்தைத் தாக்குகிறான். ஆத்துமாக்களை இரட்சிப்பதில் ஓர் பலத்த கருவியாயிருக்கும் பொருட்டு தேவன் ஊழியர்களை அபிஷேகம் பண்ணினார் என்றும் அவர்கள் எவ்வளவாக நித்திய பிதாவைத் தங்கள் ஜீவியங்களில் ஆளுகை செய்யும்படி இடங் கொடுக்கிறார்களோ அவ்வளவில் மாத்திரம் தங்கள் ஊழியத்தில் சித்தி பெறக் கூடுமென்றும் அவனுக்குத் தெரியும்.LST 217.1

    கெட்டுப்போன இந்த யுகத்தின் பாவங்களுக்கு விரோதமாய் நாம் விழிப்பாயிருக்க வேண்டும். கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகள் வீண் சம்பாஷணைகளுக்கும், வாழ்க்கைப்பட்டுள்ள ஸ்திரீகளோடாவது அல்லது வாழ்க்கைப்படாமல் தனிமையாயிருக்கும் ஸ்திரீகளோடாவது நெருங்கிப் பழகவும் இறங்கிவிடாதிருப்பார்களாக. கனம் என்ற விஷயத்தில் அவர்கள் தங்கள் சரியான இடத்தைக் காத்துக் கொள்வார்களாக; என்றாலும் அவர்கள் எல்லாரோடும் அன்னியோன்னியமாயும்,பட்சமாயும், மரியாதையாயும் இருக்கலாம். அற்பத் தனத்திற்கும் கடுஞ் சிநேகத்திற்கும் வழி நடத்தும் எல்லாவற்றையும் விட்டு அவர்கள் விலக வேண்டும். இது விலக்கப்பட்ட பூமி, அதின் மேல் பாதங்களை வைப்பது தகுதியல்ல. ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செய்கையும் மேன்மைப் படுத்துகிறதாயும், செம்மைப்படுத்துகிறதாயும் மகிமைப்படுத்துகிறதாயும் இருப்பதாக. அப்படிப்பட்ட விஷயங்களைக் குறித்து அஜாக்கிரதையாய் இருப்பது பாவம்.LST 217.2

    நமது ஊழியர்கள் நினைவிலும் செய்கையிலும் சுத்தமாயிருக்க வேண்டியதின் அவசியத்தை நான் வற்புறுத்துகிறேன். நாம் தனித்தனி தேவனுக்கு உத்தரவாதிகளாயும் நாமே நமக்கென்று செய்யக் கூடியதோர் வேலையையுடையவர்களாயும் இருக்கிறோம். உலகம் மேன்மையடையப் போராடுகிறதே அவ்வேலை. நாம் அந்நியோன்னியமாயிருக்கப் பயில வேண்டியதாயிருந்தாலும் அது வேடிக்கையாக மாத்திரம் இராமல், ஓர் உன்னத நோக்கத்திற்காக இருக்கட்டும்.LST 217.3

    இவ்வெச்சரிப்பின் அவசியத்தைக் காண்பிக்க நம்மைச் சுற்றிலும் போதுமான காரியங்கள் நடைபெறுகிறதில்லையா? எங்கும் மானிட வர்க்கத்தின் நாசங்களும், தகர்க்கப்பட்டுப் போன குடும்பங்களும் நாசமடைந்த வீடுகளும் காணப்படுகின்றன. ஆச்சரியமான பிரகாரம் ஒழுங்கு தள்ளுபடியாகிறது, சன்மார்க்கத்தின் திட்டம் தாழ்ந்திருக்கிறது, பூமி விரைவில் ஓர் சோதோமாகிறது. ஜலப் பிரளயத்திற்கு முன்னிருந்த உலகின் மேல் தேவ தண்டனையைக் கொண்டு வந்ததும் சோதோம் அக்கினியால் நாசமாகும்படிச் செய்ததுமான பழக்கங்கள் விரைவில் அதிகரிக்கின்றன. பூமியானது அக்கினியால் சுத்திகரிக்கப்பட போகிற முடிவை நாம் நெருங்கி வருகிறோம்.LST 217.4

    சத்திய வெளிச்சத்தைத் தேவன் எவர்களுடைய கரங்களில் வைத்திருக்கிறாரோ அவர்கள் சகல அக்கிரமத்தையும் விட்டு விலகக் கடவர்கள். எவ்விதத்திலும் தேவனுடைய வேலையை பங்கப்படுத்துகிற அல்லது அதின் பரிசுத்தத்தைக் கறைப்படுத்துகிற ஒவ்வொரு ஆசையையும் பழக்கத்தையும் மேற்கொண்டு அவர்கள் நேர்மையின் பாதைகளில் நடப்பார்களாக.LST 218.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents