Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    யோசுவாவும் தூதனும்

    காணப்படாத உலகத்தினின்று காணப்படும் உலகத்தைப் பிரிக்கும் திரை உயர்த்தப்பட்டு , மனிதனின் மீட்பைக் குறித்து கிறிஸ்து வும் பரிசுத்த தூதர்களும் சாத்தானோடும் அவனுடைய பொல்லாத தூதர்களோடும் நடக்கும் பெரும் போரைத் தேவனுடைய ஜனங்கள் பார்க்க கூடுமாயின், பாவ அடிமைத் தனத்தினின்று ஆத்துமாக்களை விடுவிப்பதாக தேவன் செய்யும்அதிசய கிரியையையும் ,பொல்லாங்கன் அவர்கள் மீது கொண்டிருக்கும் விரோதத்தினின்று அவர்களைக் காப்பதற்கு அவர் எப்பொழுதுமே வல்லமையாய்க் கிரியை செய்வதையும் அவர்கள் கிரகித்து சாத்தனின் தந்திரங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் இதை விட இன்னும் அதிக அயத்தமாயிருப்பர்கள்.LST 124.4

    மீட்பின் ஒழுங்கின் விஸ்தாரத்தையும் அதின் முக்கியத்தையும் கிறிஸ்துவின் உடன் ஊழியர்களாகிய தங்கள் முன்னிருக்கும் வேலையின் மகத்துவத்தையும் குறித்த விசயத்தில் அவர்கள் பக்திவினயமாயிருப்பார்கள். அவர்கள் தங்களைத் தாழ்மைப் படுத்திகொண்ட போதிலும் , பரலோகமெல்லாம் தங்கள் இரட்சிப்பில் ஆவலாயிருக்கிரதென்றரிந்து தைரியம் கொள்வார்கள் .LST 125.1

    சாத்தனின் வேலையையும் கிறிஸ்துவின் வேலையையும் தமது ஜனங்களைக் குற்றஞ்சாட்டுவோனை மேற்கொள்ளும் நமது மத்தியஸ்தரின் வல்லமையைப் பற்றி காண்பிக்கும் மிக்கப் பலமானதும் நன்றாய்ப் பதியத்தக்கதுமான தோர் திருஷ்தாந்தம் சகரியாவின் தீர்க்கதரிசனத்தில் கொடுக்கப் பட்டிருக்கிறது (அதிகாரம் 3) . திவ்விய தரிசனத்தில் , பிரதான ஆசாரியனாகிய யோசுவா ” அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய் ” கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்று மிகுந்த உபத்திரவத்திலிருக்கும் தன் ஜனங்களுக்காகவேண்டி தேவனுடைய இரக்கித்திற்காகக் கெஞ்சுகிறதை தீர்க்கதரிசி காண்கிறான் . அவனை தடை செய்ய சாத்தான் அவன் வலது பக்கத்தில் நிற்கிறான்.LST 125.2

    பூமிய்லே தேவனைப் பற்றிய அறிவைக் காத்துகொள்வதற்கு இஸ்ரவேலர் தெரிந்து கொள்ளப்பட்டதினிமித்தம் , அவர்கள் ஓர் ஜாதியாய் ஏற்பட்டதிலிருந்து சாத்தான் அவர்களுக்கு விரோதமாய் விசேச கவனம் வைத்து அவர்களை அழிப்பதற்கு நிர்ணயித்திருந்தான் . அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருந்த நாள் மட்டும் அவன் அவர்களுக்கு ஏவ்வித தீங்கும் செய்யக்கூடாதிருந்தது ; ஆகவே அவன் அவர்களைப் பாவத்தில் விழப்பண்ணுவதற்கு தன் சகல வல்லமையையும் தந்திரத்தையும் பிரயோகித்தான் . அவனுடைய சோதனைகளிலகப் பட்டு , தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறி அவ்விதம்அவர்கள் தங்கள் பெலத்திற்காதாரமா இருந்தவரைவிட்டுப் பிரிக்கப் பட்டு தங்கள் அஞ்ஞான சத்துருக்களுக்கிரையாகும்படி விடப்பட்டார்கள் . பாபிலோனுக்கு அவர்கள் சிறையாகக் கொண்டு போகப்பட்டு அங்கே அனேக ஆண்டுகள் தங்கி இருந்தார்கள் . என்கிலும் ஆண்டவர் அவர்களை மறக்கவில்லை . தீர்க்கதரிசிகள் மூலமாய் அவர்களைக் கடிந்து கொண்டு எச்சரித்தார் . ஜனங்கள் தங்கள் குற்றத்தை உணர்ந்து தேவனுக்கு முன்பாகத் தங்களைத் தாழ்த்தி மெய் மனஸ் தாபத்துடன் அவரண்டை திரும்பி வந்தார்கள். பிறகு கர்த்தர் அவர்களுக்குத் தைரியமான வார்த்தைகளை யனுப்பி, அவர்கள் சிறையிருப்பிலிருந்து அவர்களை மீட்பதாகவும் திரும்பும் தமது தயவை அவர்களுக்குக் காண்பிப்பதாகவும் கூறினார். இதை தடுக்கவே சாத்தான் நிர்ணயம் பண்ணியிருந்தான் இஸ்ரவேலின் மீதியான ஓர் கூட்டம் இயற்கனவே தங்கள் சொந்த தேசம் திரும்பிப் போய் விட்டது, சாத்தான் தன் தூதாட்களகிய அஞ்ஞான ஜாதிகளை ஏவி எழுப்பி அவர்களைக் கொண்டு சமூலமாய் அவர்களை நிர்மூலமாக்கப் பிரயாசப்பட்டான்.LST 125.3