Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வன்முறைச் செயல்கள்

    நோவாவின் நாட்களில், பெரும்பான்மையான கூட்டத்தார் சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கின்றவர்களாகவும், பொய்களில் மகிழ்பவர்களாகவும் காணப்பட்டனர். பூமி வன்முறையால் நிறைந்திருந்தது. யுத்தமும் குற்றமும் கொலையும் அன்றாட நிகழ்வாயிருந்தது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாகவும் அப்படியே இருக்கும். - 1BC 1090 (1891).கச 16.1

    தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றால், தொழிற்சங்கங்கள் உடனடியாக வன்முறையைத் தூண்டிவிடுகின்றன. உலகத்தின் மக்கள் தேவனுடன் இசைந்து இல்லை என்பது மென்மேலும் தெள்ளத்தெளிவாகி வருகின்றது. சாத்தானுடைய தலைமையின் கீழுள்ள, தீய ஊழியர்களின் நிலையான அணிவகுப்பைப்பற்றி, எந்தவொரு விஞ்ஞானக் கொள்கையும் விளக்கம் தரவியலாது. ஒவ்வொரு ஒழுங்கீன கும்பலிலும் தீய தூதர்கள் கிரியை செய்து, வன்முறைச் செயல்களை செய்யும்படியாக மனிதர்களைத் தூண்டிவிடுகின்றனர்...கச 16.2

    மனிதர்களின் துணிகரமாகத் தவறு செய்யும் தன்மையும் கொடூரத் தன்மையும், ஒரு குறிப்பிட்ட உச்சநிலையை அடையும்போது, தேவன் தமது மகத்துவத்தில் தம்மைத்தாமே வெளிப்படுத்துவார். வெகு சீக்கிரத்தில் உலகத்தின் அக்கிரம் அதன் வரம்பை வந்தடையும். அப்போது நோவாவின் நாட்களில் நடந்ததுபோல், தேவன் தமது நியாயத்தீர்ப்புகளை ஊற்றுவார். - UL 334 (1903).கச 16.3

    கொலைகள், கொள்ளைகள், இரயில் விபத்துகள் மற்றும் வன்முறையான செயல்களைக்குறித்து நாம் கேள்விப்படுகின்ற பயங்கரமான செய்திகள், எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று என்ற உண்மையைத் தெரிவிக்கின்றன. இப்பொழுது, அதிலும் இப்பொழுதே, நாம் கர்த்தருடைய இரண்டாம் வருகைக்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கவேண்டும். - Letter 308, 1907.கச 16.4