Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பேரழிவுகளில் தேவனுடைய நோக்கம்

    ஒரு நொடிப்பொழுதின் எச்சரிக்கையின்றி கப்பல்கள் நித்தியத்திற்ககுள்ளாகக் கவிழ்ந்து போகின்ற - கடலில் ஏற்படும் அச்சம் தரும் பேரழிவுகளின் அர்த்தம் என்ன? ஏழைகளை ஒடுக்கி மனிதர்களால் குவித்துவைக்கப்பட்ட பெரும் பகுதியான ஐசுவரியங்கள் அக்கினிக்கு இரையாகின்ற - பூமியின்மீது உண்டாகும் விபத்துக்களின் அர்த்தம் என்ன? கர்த்தருடைய பிரமாணத்தை மீறி, அவரது உடன்படிக்கையை உடைத்து, அவரது ஒய்வுநாளை மிதித்து, அதன் இடத்தில் ஒரு பொய்யான ஒய்வுநாளை ஏற்றுக்கொண்டிருப்போருடைய சம்பத்தைப் பாதுகாப்பதற்காக அவர் குறுக்கிடமாட்டார்.கச 19.3

    தேவனுடைய வாதைகள் ஏற்கெனவே பூமியின்மீது விழுந்து கொண்டிருக்கின்றன. பரலோகத்திலிருந்து வரும் ஒரு அக்கினியின் மூச்சுக்காற்றைப் போன்று, மிகவும் விலை மதிப்புமிக்க கட்டிடங்களை அவை துடைத்துழித்துக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்தவர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளுகிறவர்களுக்கு இந்த நியாயத்தீர்ப்புகள் உணர்வைக் கொண்டுவராதா? உலமகம் எச்சிரிப்படையவும், பாவிகள் பயமடைந்து அவருக்கு முன்பாக ந்டுங்கவும், தேவன் அவைகளை வர அனுமதிக்கின்றார். - 3MR 311 (1902).கச 19.4

    இந்தப் பேரழிவுகளை நடைபெற அனுமதிப்பதில், தேவன் ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்கின்றார். அவைகள், தங்களது உணர்வுக்கு வரத்தக்கதாக ஆண்களையும் பெண்களையும் தேவன் அழைக்கும் வழிமுறைகளில் ஒன்றாக இருக்கின்றன. தேவன் தமது வார்த்தையில் தெளிவாக வெளிப்படுத்தியிருப்பதை சந்தேகிக்கும் மனித ஏதுகரங்களுக்கு, அவர் இயற்கையின் மூலமாகவும், வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகளின் மூலமாகவும் உணர்த்தி அறிவிக்கின்றார். - 19MR 279 (1902).கச 19.5

    மாபெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதத்துடன் கூடிய பூமியதிர்ச்சிகளையும், சூறாவளிகளையும், அக்கினி மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் அழிவையும், நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம் அல்லவா! இந்தப் பேரழிவுகள், இயற்கையின் ஒழுங்கற்ற கட்டுக்கடங்காத சக்திகளின் திடீர் எழுச்சி போன்றும், மனிதனின் கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் அப்பாற்பட்டது போன்றும் வெளிப்படையாய் தெரியலாம். ஆனால் அவையெல்லாவற்றிலும், தேவனுடைய நோக்கத்தை வாசித் துணர முடியும், அவைகள், ஆண்களையும் பெண்களையும் அவர்களது ஆபத்து நிலையை உணர்த்தி எழுப்புவதற்கு அவர் பயன்படுத்தும் ஏதுகரங்க்களாக இருக்கின்றன. - PK 277 (c.1914).கச 19.6