Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மிருகத்தின் முத்திரை எப்போது பெற்றுக்கொள்ளப்படுகின்றது?

    இதுவரையில் எவரும் மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக் கொள்ளவில்லை. — EV 234 (1899).கச 162.7

    ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பு, இன்னும் மிருகத்தின் முத்திரையாக வில்லை. இந்த விக்கிரகமாகிய ஓய்வுநாளை மனிதர் வணங்கும்படி சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்வரை, அதுமிருகத்தின் முத்திரையாக இருக்காது. அந்த நாள் பரீட்சையாக வரப்போகின்ற ஒரு நேரம் வ்ரும்; ஆனால் அந்த நேரம் இன்னமும் வரவில்லை. — 7 BC 977 (1899).கச 162.8

    தேவன் ஓய்வுநாளை மனிதர்களது விசுவாசத்தைச் சோதிக்கின்ற ஒரு பரீட்சையாக, அவர்களுக்கும் தமக்கும் இடையில் ஒரு அடையாளமாகக் கொடுத்திருக்கின்றார். தேவனுடைய பிரமாணத்தைக்குறித்த வெளிச்சம் தங்களிடத்தில் வந்த பின்பும் அதற்குக் கீழ்ப்படியாமல், தோவனுடைய பிரமாணத்திற்கு மேலாக தேடர்ந்து மானிடச் சட்டங்களை உயர்த்திப் பிடிக்கும் மனிதர்கள், தங்களுக்கு முன்னிருக்கும் மாபெரும் இக்கட்டுக் காலத்திலே மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்வார்கள். — EV 235 (1900).கச 162.9

    ஓய்வுநாள் சத்தியம் விசேஷமாகச் சர்ச்சைக்குரிய காரியமாக இருப்பதால், அது விசுவாசத்தின் மாபெரும் பரீட்சையாக இருக்கும். இந்தக் கடைசி பரீட்சை மனிதர்கள்மீது கொண்டுவரப்படும்பொழுது, யார் தேவன் பக்கம் நின்று அவரைச் சேவிப்பார்கள். யார் அவரைச் சேவிக்கமாட்டார்கள் என்று, அவர்களுக்கு மத்தியில் வேறுபாட்டின் கோடு தெளிவாக வரையப்படும்.கச 163.1

    நான்காம் கற்பனைக்கு விரோதமாகச் சட்டம் இயற்றியிருக்கும் அரசாங்கத்திற்குப் பணிந்து போலியான ஓய்வுநாளைக் கைக்கொள்ளுதல் என்பது தேவனுக்கு எதிராக இருக்கின்ற ஒரு வல்லமைக்கு உண்மை யாயிருக்கக் கடமைப்பட்டிருப்பதின் ஓரு உறுதிமொழியாக இருக்கும் போது, தேவனுடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து மெய்யான ஓய்வு நாளைக் கைக்கொள்ளுதல் என்பது சிருஷ்டிகருக்கு உண்மையாயிருப்பதின் ஆதாரமாக இருக்கும். ஓரு சாரார் உலக அதிகாரங்களுக்கு அடிபணிவதின் அடையாளத்தை ஏற்றுகொள்வதின்மூலமாக மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்ளும்பொழுது, மற்றொரு சாரார் தெய்வீக அதிகாரத்திற்குக் கீழ்ப்படியக் கடமைப்பட்டிருப்பதின் அடையாளத்தை தெரிந்தெடுப்பதின் மூலமாக தேவனுடைய முத்திரையைப் பெற்றுக்கொள்வர். - GC 605 (1911).கச 163.2