Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    9 ۔ஞாயிறு ஆசரிப்புச் சட்டங்கள்

    தேவனின் அதிகாரத்திற்கு எதிரான சாத்தானின் சவால்!

    “தனது வேசித்தனமாகிய மதுவை சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தினால்” பாபிலோனை தேவன் வெளிப்படையாகக் கடிந்துரைக்கின்றார்…கச 90.1

    தேவன் ஆறு நாட்களுக்குள் உலகத்தை உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்… இந்த நாளை அவர் பரிசுத்தபடுத்தி, தமது மக்களால் தங்களது தலைமுறைதோறும் ஆசரிக்கப்படும்படியாக, மற்ற நாட்களிலிருந்து அதைத் தமக்கெறு பரிசுத்தமானதாகப் பிரித்தெடுத்தார். ஆனால் பாவமனுஷனோ, தேவனுக்கும் மேலாகத் தன்னை உயர்த்தி, தேவனுடைய ஆலயத்தில் உட்கார்ந்து, தன்னைத் தேவனாகக் காண்பித்துக்கொண்டு, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைத்தான். இந்த வல்லமை தன்னை தேவனுக்குச் சமமாக மாத்திரமல்ல, தேவனுக்கு மேலாகவும் தன்னை உயர்த்திக் காண்பித்து, ஏழாவது நாள் இருக்க வேண்டிய இடத்திலே வாரத்தின் மூதலாம் நாளை வைத்து, ஓய்வுநாளை மாற்றி, அதன் வல்லமையை நிரூபிக்க நினைத்தது. புராட்டஸ்டண்டு உலகம், போப்பு மார்க்கத்தின் இந்தக் குழந்தையை (ஞாயிற்றுக்கிழமையை) பரிசுத்தமானதாக எடுத்துக்கொண்டது. தேவனுடைய வார்த்தை இதனை, அவளுடைய வேசித்தனம் (வெளி. 14:8) என்று அழைக்கிறது. — 7BC 979 (1900).கச 90.2

    கிறிஸ்தவர்கள் பெருகிவந்த காலகட்டத்தின்போது, மனிதனுடைய மகிழ்ச்சிக்கு மாபெரும் எதிரியானவன். நான்காம் கற்பனையாகிய ஏழாம்நாள் ஓய்வுநாளை விசேஷ தாக்குதலுக்குரிய ஒரு பொருளாக ஆக்கினான். சாத்தான் சொல்வதாவது: “தேவனுடைய நோக்கங்களுக்கு எதிராக நான் செயல்படுவேன். தேவனுடைய சிருஷ்டிப்பின் சின்னமாகிய ஏழாம்நாள் ஓய்வுநாளைப் புறக்கணிப்பதற்கான வல்லமையை என்னுடைய பின்னடியார்களுக்கு அளிப்பேன். அப்படியாக தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்ட ஓய்வுநாள் மாற்றப்பட்டுவிட்டது என்று உலகத்திற்குக் காண்பிப்பேன். மக்களுடைய மனதில் அந்த நாள் இல்லாதவாறு செய்வேன். அதைப்பற்றிய நினைவையே அழித்துவிடுவேன். அந்த நாளுக்குப் பதிலாக, அதன் இடத்திலே தேவனுடைய நம்பிக்கைக்கு ஆதாரச் சான்றுகளை பெற்றிராத, அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் நடுவில் அடையாளமாக இல்லாத ஒரு நாளை வைப்பேன். ஏழாம் நாளுக்கு தேவன் நியமித்த பரிசுத்தத்தை இந்த நாளுக்கு மாற்றும்படியாக, இந்த நாளை ஏற்றுக்கொண்டவர்களை நான் வழிநடத்துவேன். — 7BC 979 (1900).கச 90.3