Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அண்டசராசரத்தின் பொக்கிஷங்களை ஆராய்தல்

    நம் பார்வையை மறைக்கும் திரை நீக்கப்படும்போது, அந்த அழகிய உலகை நம் கண்கள் காணும். தற்போது அந்தக் காட்சியில், ஒரு மினுக்கொளியளவே நாம் நுண்ணோக்கியின் மூலமாக பெற்றுக்கொள்கிறோம்; வானமண்டலங்களின் மகத்துவத்தைத் தற்போது தொலைநோக்கி மூலமாக நாம் காண்கின்றோம். ஆனால், பாவத்தின் சாபம் நீக்கப்பட்ட பின்பு, இந்த உலகம் “காத்தராகிய தேவனின் மகிமையில்” தோன்றும். நமது ஆராய்ச்சிக்காக எத்தகைய களம் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது! அங்கே அறிவியல் மாணாக்கன், சிருஷ்டிப்பின் பதிவேடுகளை வாசித்து, அதிலே தீமையின் பிரமாணத்தை நினைவூட்டும் வகையில் எதுவும் இல்லை என்பதைப் பகுத்தாராய்வான். அவன் இயற்கையினுடைய சத்தத்தைக் கவனித்து, அதிலே எந்த ஒரு வேதனையின் குரலையோ அல்லது வருத்தத்தின் முனகளையோ கேட்கமாட்டான்...கச 220.3

    அண்டசராசரத்தின் பொக்கிஷங்கள் அனைத்தும், தேவனுடைய பிள்ளைகளின் ஆராய்ச்சிக்காகத் திறந்து வைக்கப்படும். விழுந்துபோகாத ஜீவராசிகளின் ஞானம் மற்றும் மகிழ்ச்சிக்குள்ளாக, சொல்லொண்ணாக்களிப்புடன் நாம் பிரவேசிப்போம். யுகங்கள் நெடுகிலும், தேவனுடைய கரத்தின் கிரியைகளைத் தியானிப்பதின் விளைவாகச் சம்பாதித்த பொக்கிஷங்களை நாம் பகிர்ந்துகொள்வோம். — Ed 303, 307 (1903).கச 220.4

    அவர்கள் மரணக்கட்டுகளிலிருந்து விடுதலைபெற்றவர்களாக, தூரமான உலங்களுக்கும் களைப்பின்றி பறந்து திரிவர். இந்த உலகங்கள்தான், மனிதனின் சாபத்தைக் கண்டு வருந்தியவைகளும், ஒரு ஆத்துமா மீட்கப்பட்ட செய்தியைக் கேட்டு மகிழ்ந்து பாடியவைகளுமாம்... தெய்வீக சிங்காசனத்தைச் சுற்றி, தங்களுக்கு குறிக்கப்பட்ட பாதையில் ஓடுகின்ற தேவனுடைய மகிமையான படைப்பாகிய சூரியன்களையும், நட்சத்திரங்களையும், அதன் அமைப்புகளையும் மங்காத பார்வையோடு பிரமித்து அவர்கள் நோக்குவார்கள். மிகச் சிறியவற்றிலிருந்து, மிகப் பெரியவை வரையுள்ள இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளின் மீதும், சிருஷ்டிகரின் நாமம் எழுதப்பட்டிருக்கும், அவை அனைத்திலும் அவரது வல்லமையின் ஐசுவரியங்கள் வெளிப்பட்டிருக்கும். — GC 677, 678 (1911).கச 220.5