Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நாட்டுப்புறச் சூழலில் சிறந்த ஆரோக்கியம்

    கலவரமும் குழப்பமும் தொடர்ந்து இருக்கக்கூடிய பட்டணங்களிலே, தேவனுடைய ஜனங்கள் குடியிருப்பதென்பது ஆண்டவரின் சித்தமல்ல. பட்டணத்தினுடைய பரபரப்பினாலும் வேகத்தினாலும் கூச்சலினாலும், சரீர ஒழுங்கமைப்பு முழுவதும் சீர்குலைக்கப்படுவதால், அவர்களது பிள்ளைகள் அதினின்று காப்பாற்றப்பட வேண்டும். — 2SM 357 (1902).கச 72.5

    தங்களது கால்களை வைப்பதற்கு பசுமையான புல்வெளி ஒரு சிறிதளவு கூட இல்லாமல், பட்டணங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் அநேகர், வருடா வருடம் அதே அசுத்தமான விளையாட்டு மைதானங்களையும், குறுகலான சந்துகளையும், அழுக்கடைந்த செங்கற்சுவர்களையும், நடைபாதை இடங்களையும், புழுதி மற்றும் புகை நிறைந்த வானங்களையும் பார்த்துப் பழகிப்போன அநேகர் — ஏதாவதொரு விவசாயம் செய்யப்படும் பகுதிக்கு கொண்டுசெல்லப்படுவார் கனால், அங்குள்ள பசுமையான வயல் நிலங்கள், காடுகள், மரங்கள், குன்றுகள், ஓடைகள், தெளிவான வானங்கள் மற்றும் சிராமப்புறத்தின் புத்துணர்ச்சியூட்டும் தூய்மையான காற்றுடன் சூழப்பட்டுள்ள இடங்கள் அனைத்தும் அவர்களுக்கு ஏறக்குறைய பரலோகம்போல் காணப்படும். — MH 191, 192 (1905).கச 72.6

    பட்டணங்களைச் சூழந்திருக்கின்ற இயல்பான சூழ்நிலைகள், அநேக வேளைகளில் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கின்றதாய் இருக்கின்றன. தொடர்ச்சியாக வியாதியை எளிதாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய சாதக நிலை, எங்கும் நிறைந்துள்ள அசுத்தமான காற்று, அசுத்தமான தண்ணீர், அசுத்தமான உணவு , ஜனக்கூட்டம் நிறைந்த நெருக்கடியான இருளடைந்த சுகாதாரமற்ற இருப்பிடங்கள், இவைகளெல்லாம் அங்கே நாம் சந்திக்கவேண்டிய அநேக தீமைகளில் சில, நமது ஜனங்கள் பட்டணங்களுக்கு படையெடுத்துச் சென்று அங்கே அடுக்குமாடிக் கட்டடங்களிலும், பல தனி வீடுகளைக்கொண்ட குடியிருப்பு மனைகளிலும், ஜனநெரிசலில் நெருக்கியடித்துக்கொண்டும் வாழவேண்டுமென்பது தேவனுடைய நோக்கமல்ல. — MH 365 (1905).கச 73.1