Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    5. மீதமானவர்களின் பக்திவாழ்க்கை

    இருமடங்கான வாழ்க்கை

    வானத்தின் மேகங்களிலே இரண்டாம் முறையாக வரும் கிறிஸ்துவின் வருகைக்கு சற்று முன்னர் உள்ள இந்த யுகத்தில், யோவான் ஸ்நானகன் செய்த வேலையைப் போன்ற ஒரு வேலை செய்யப்படவேண்டும். கர்த்தரின் மாபெரும் நாளில் நிற்பதற்கென்று, மக்களை ஆயத்தப்படுத்தக்கூடிய மனிதர்களை தேவன் அழைக்கின்றார்… யோவான் கொடுத்த தூதினைப்போல நாம் கொடுக்கவேண்டுமானால், அவரைப் போன்ற ஆவிக்குரிய அனுபவம் நமக்கும் இருக்கவேண்டும். நமக்குள்ளும் அதே போன்ற வேலை கண்டிப்பாக செய்யப்படவேண்டும். நாம் தேவனை நோக்கிப்பார்க்க வேண்டும். அவ்வாறு அவரை நோக்கிப் பார்ப்பதினால் சுயத்தை விட்டு விடுவோம். - 8T 332, 333 (1904).கச 45.1

    தேவனுடன் உள்ள தொடர்பு குணத்தையும் வாழ்க்கையையும் மேம்படுத்தும், கிறிஸ்துவின் முதல் சீடர்களைப்போல் நாமும் கிறிஸ்துவுடன் இருந்திருக்கின்றோம் என்று, நம்மைக் குறித்த அறிவை மனிதர்கள் அறிந்துகொள்வார்கள். ஊழியர்களுக்கு வேறு ஒன்றும் அளிக்க முடியாத வல்லமையை இது அளிக்கும். இந்த வல்லமையை இழக்கச் செய்யும்படி அவன் தன்னை அனுமதிக்கக்கூடாது. நாம் இருமடங்கான வாழ்க்கையை வாழவேண்டும்-அதாவது, சிந்தனை மற்றும் செயல் நிறைந்த வழ்க்கை, அமைதியான ஜெபம் மற்றும் ஊக்கமான வேலை நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டும். - MH 512 (1905).கச 45.2

    ஜெபமும் முயற்சியும், முயற்சியும் ஜெபமும் உங்களது வாழ்க்கையின் வேலையாக இருக்கும். செயல்திறனும் புகழ்ச்சியுமாகிய அனைத்தும், தேவனுக்கு மாத்திரமே கொடுக்கப்படவேண்டியதுபோல் நீங்கள் ஜெபிக்க வேண்டும். கடமைகள் அனைத்தும் உங்களுக்கு மாத்திரமே சொந்தமானதுபோல் உழைக்க வேண்டும். - 4T 538 (1881).கச 45.3

    ஒரு மனிதனும் ஜெபமின்றி ஒரு நாளோ அல்லது ஒரு மணி நேரமோ பாதுகாப்பாக இருப்பதில்லை. - GC 530 (1911).கச 45.4

    ஜெபம் மட்டுமே செய்து, மற்ற எதுவுமே செய்யாமல் இருக்கும் ஒரு நபர் சீக்கிரத்தில் ஜெபிப்பதையும் விட்டுவிடுவார். - SC 101 (1892).கச 45.5