Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தீய தூதர்கள் மனிதர்களைப்போலத் தோற்றமளிப்பர்

    தேவன்மீதூள்ள தங்களது விசுவாச பக்தியினின்று மனிதர்களை வசீகரித்து இழுத்துச் செல்ல சாத்தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் உபயோகித்துக்கொள்வான். அவனும் அவனோடுகூட விழுந்துபோன தூதர்களும், பூமியிலே மனிதர்களைப்போல் தோன்றி வஞ்சிக்க முயற்சிப்பார்கள். தேவதூதர்களுங்கூட மனிதர்கள்போலத் தோன்றி, எதிரியின் நோக்கங்களை முறியடிப்பதற்காக தங்களது வல்லமயைின்கீழ் உள்ள ஒவ்வொரு வழிவகையையும் உபயோகிப்பார்கள். 8MR 399 (1903).கச 116.5

    மனிதர்களின் சாயலில் உள்ள தீய தூதர்கள், சத்தியத்தை அறிந்தவர்களுடன் பேசுவார்கள். தேவனுடைய தூதுவர்களின் வார்த்தைகளுக்குத் தவறான விளக்கங்கொடுத்து, தவறான எண்ணங்கொள்ளச் செய்வார்கள்… ஏழாம்நாள் அட்வென்டிஸ்டுகள் எபேசியர் ஆறாம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்ற எச்சரிப்புகளை மறந்துவிட்டார்களா? அந்தகார லோகாதிபதியின் ஆவிகளுக்கு எதிராக, நாம் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். நம்முடைய தலைவராகிய கிறிஸ்துவை நாம் நெருக்கமாக பின்தொடராவிட்டால், சாத்தான் நம்மீது வெற்றிகொண்டு விடுவான். — 3SM 411 (1903).கச 117.1

    அவிசுவாத்தின் ஒரு வல்லமையான ஆவியை, விசுவாசிகளின் உருவத்தில் நம் அணிவரிசைகளுக்குள் கொண்டுவரும்படியாக தீயதூதர்கள் கிரியைசெய்வார்கள். இந்தக் காரியம்கூட உங்களை அதைரியப்படுத்திவிடவேண்டாம். மாறாக, சத்தானுடைய ஏதுகரங்களின் வல்லமைகளுக்கு எதிராக, கர்த்தருக்கு உதவியாக ஒரு மெய்யான உள்ளத்தைக் கொண்டுவருவீர்களாக. இந்தத் தீமையின் வல்லமைகள் நமது கூட்டங்களிலே ஒரு ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அல்ல, மாறாக, தேவனுடைய ஆவியின் செல்வாக்குகளுக்கு எதிராக கிரியை செய்வதற்காக கூட்டங்கூடுகின்றன. — 2MCP 504, 505 (1909).கச 117.2

    மரித்தவர்களைப்போலத் தோற்றமளித்தல்கச 117.3

    மரித்த பரிசுத்தவான்களைப்போலவும் மரித்த பாவிகளைப் போலவும் தோற்றமெடுப்பதும், அவற்றை மனிதர்கள் காணும்படியாக தோன்றவைப்பதும் தீய தூதர்களுக்குக் கடினமானதல்ல. இப்படிப்பட்ட வெளிப்பாடுகள் அடிக்கடி நடக்கும். காலத்தின் முடிவை நாம் நெருங்குகின்றபோது மிகவும் திடுக்கிடச் செய்கின்ற, மனித உருவத்தின் தோற்றங்களின் இப்படிப்பட்ட வெளிப்பாடுகள் தோன்றும். — EV 604 (1875).கச 117.4

    தங்களுக்கு அன்பானவர்களைக் கல்லறையிலே கிடத்தியிருப்பவர்களது அனுதாபத்தைச் சம்பாதிக்க சாத்தான் கையாளப்போகின்ற கணக்கிடப்பட்ட தந்திரம், மிகவும் வெற்றிகரமானதும் வசீகரிக்கக்கூடியதுமான ஒரு ஏமாற்று வேலையாகும். மிகவும் நேசிக்கப்பட்ட இறந்துபோனவர்களது தோற்றத்தில் தீயதூதர்கள் வந்து, அவர்களது வாழ்க்கையோடு தொடர்புடைய சம்பவங்களைச் சம்பந்தப்படுத்திச் சொல்லி, அவர்கள் உயிரோடு வாழ்ந்தபோது செய்த செயல்களை செய்வார்கள். இவ்விதமாக, மரித்த அவர்களது நண்பர்கள் தூதர்களாக தங்களுக்கு மேலாக ஆகாயத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்றும், தங்களோடு அவர்கள் தொடர்புகொள்கின்றார்கள் என்றும், மனிதர்கள் நம்பும்படியாக அவைகள் வழிநடத்தும், மரித்துப்போன நண்பர்களாக பாவனை செய்யும் இந்தத் தீயதூதர்கள், ஒருவிதத்தில் வழிபாட்டு சிலையாகவே சிலரால் கருதப்படுகின்றன. தேவனுடைய வார்த்தையைக்காட்டிலும் மரித்துப்போனவர்களின் தோற்றத்தில் வரும் தீயதூதர்களின் வார்த்தை அநேகருக்கு அதிமுக்கியமானதாகக் கருதப்படும். - ST Aug. 26, 1889.கச 117.5

    மனிதர்களுடைய மரித்துபோன நண்பர்களின் தோற்றத்தை அவர்களுக்கு முன்பாகக் கொண்டுவரும்படிக்கு சாத்தானுக்கு வல்லமை இருக்கின்றது. போலியானது தத்ரூபமாக இருக்கும்; பழக்கப்பட்டபார்வை, வார்த்தைகள், குரல் ஆகிய அனைத்தும் ஆச்சரிப்படத்தக்க விதத்தில் நிகழ்த்திகாட்டப்படும்… தங்களால் நேசிக்கப்படும் உறவினர்கள் அல்லது நண்பர்களின் வடிவில் தோன்றி, மிகப் பயங்கரமான மதப்புரட்டுகளை அறிவிக்கும் பிசாசுகளின் ஆவிகளுடன் மனிதர்கள் எதிர்த்து நிற்கும்படி கொண்டுவரப்படுவார்கள். இப்படிச் சந்திக்கும் இவர்கள், நமது மென்மையான அனுதாபங்களைத் தூண்டி, அவர்கள் கூறும் போலியானவைகளை ஆதரிப்பதற்காக அற்புதங்களை செய்வார்கள். — GC 552, 560 (1911).கச 118.1