Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    முன்னுரை

    கர்த்தருக்கு கனமும் மகிமையும் உண்டாவதாக !

    கிறிஸ்துவிற்குள் பிரியமான தேவனுடைய ஜனமே,கச 3.1

    “உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு” - ஆமோஸ் 4:12.கச 3.2

    கிறிஸ்துவின் சுவிசேஷமாகிய அவரின் இரண்டாம் வருகையானது, பாவத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனிதனுக்கு விடுதலையைக் கொடுக்கக்கூடியதாகவும், பாவ இருளில் தடவித்திரியும் மனிதனுக்கு நம்பிக்கை என்ற ஒளியைக் கொடுக்ககூடியதாகவும் இருக்கின்றது. இந்த உலக சரித்திரத்தின் முடிவு காலத்தின் இறுதியான நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை ஒரு உச்சக்கட்ட நிகழ்ச்சியாக இருக்கிறது. இவ்வுலகத்தின் துவக்கத்திலிருந்து நன்மைக்கும் தீமைக்கும் மத்தியில் நடந்துவருகின்ற மாபெரும் ஆன்மீகப் போராட்டம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் முடிவு பெற இருக்கின்றது.கச 3.3

    ஆண்டவரது இரண்டாம் வருகைக்கு முன்பாக நடக்க இருக்கின்ற அடையாளங்கள், நிகழ்வுகள் மற்றும் ஆயத்தங்கள் அனைத்தையும் மக்களுக்கு முன்பாக வைக்கும்படி இப்புத்தகத்தை தமிழாக்கம் செய்திருக்கின்றோம். இந்தப் புத்தகத்தில், மாபெரும் ஆன்மீகப் போராட்டம் அதன் வரிசையிலும், அதன் ஒழுங்கிலும் தொகுக்கப்பட்டுள்ளது.கச 3.4

    தனக்குக் கொஞ்சகாலம் மாத்திரம் உண்டென்று அறிந்த பிசாசானவன், தேவனுடைய பிரமாணங்களை உயர்த்திப்பிடிக்கும் தேவ மக்களுக்கு எதிரான அவனது உபத்திரவம் மற்றும் அக்கிரமத்தின் இரகசியத்தை நிறைவேற்றும்படியாக திரைக்குப்பின்னாக செய்துகொண்டிருக்கிற மறைவான திட்டங்கள் மற்றும் செயல்கள், அதற்குரிய ஆயத்தங்கள்பற்றியும் இப்புத்தகம் கூறுகின்றது.கச 3.5

    ஆவிக்குரிய உறக்கத்திலிருக்கும் அட்வெந்து பிள்ளைகளை விழித்தெழச் செய்து ஒரு எழுப்புதலைக் கொடுக்கக்கூடியதாகவும், காலத்தின் அவசியத்தையும், அவசரத்தையும் தீர்க்கதரிசன காலகட்டத்தின் முடிவையும் உணர்த்தக்கூடியவிதத்திலும் இப்புத்தகம் அமைந்திருக்கின்றது.கச 3.6

    வரப்போகும் இக்கட்டுக்காலத்தைக்குறித்தும், அதற்குரிய ஆயத்தங்களைக்குறித்தும், மிகப்பயங்கரமான எதிர்கால நிகழ்வுகளைக்குறித்தும் கூறக்கூடிய மூன்று முக்கியமான புத்தகங்களாகிய மாபெரும் ஆன்மீகப் போராட்டம், கடைசிகாலச் சம்பவங்கள், மற்றும் மாரநாதா ஆகியவைகளோடு சேர்த்து, புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷத்தையும், இந்த வருடத்திற்குள்ளாக படித்து முடிக்க முயற்சி செய்யுங்கள். பயத்தைத் தூண்டும் விதத்திலோ, இதைப் படிக்காதி ருப்பது நல்லது. மாறாக, உண்மையான பயபக்தியோடு தேவன்மீதுள்ள அன்பை அறிந்துணர்ந்து ஜெபத்தோடு படிப்பது சாலச்சிறந்ததாகும்.கச 3.7

    ஏசுவின் அன்பிற்காகவும், நமது வாழ்க்கையை மாற்றும் அவரது உறவை விரும்புவதற்காகவும், வேறெதையும் நம் வாஞ்சையாக வைக்கக்கூடாது.கச 4.1

    சவாலைச் சந்திக்க ஆயத்தப்படுங்கள் ! கடினமான காலத்தைச் சந்திக்க மிகவும் கடினமாகப் பிரயாசப்படுங்கள்! விடாமுயற்சியோடுகூடிய விசுவாசத்துடன் ஜெயங்கொள்ளுங்கள் !கச 4.2

    “நீ ஆயத்தப்படு, உ ன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து” - எசேக்கியேல் 38:7. மாரநாதா !கச 4.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents