Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பட்டணங்களிலுள்ள தொழிற்சங்கங்கள்

    நம்முடைய நெரிசலான பட்டணங்களிலே, சாத்தான் வெகு சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருக்கின்றான். அவனது வேலை குழப்பம் உண்டாக்குவதிலும், போராட்டம் உண்டு பண்ணுவதிலும்,அதிகாரிகளுக்கும் உழைப்பாளிகளுக்கும் இடையில் பிரிவினை உண்டாக்குவதிலும், சபைகளுக்குள்ளாக வந்திருக்கின்ற மாய்மாலங்களிலும் காணும்படியாக இருக்கின்றன… மாம்சத்தின் இச்சை, கண்களின் பெருமை, சுயநலத்தின் பகட்டு, அதிகார துஷ்பிரயோகம், நேசக் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் மனிதர்கள் இணைக்கப்படவேண்டி பயன்படுத்தப்படும் கொடுமை மற்றும் வன்முறை காரியங்கள் — இவைகள் மூலமாக, கடைசி நாட்களில் எரியப்போகின்ற மாபெரும் அக்கினிக்கு அவர்கள் தங்களைத் தாங்களே கட்டுகளாக கட்டிக்கொள்கின்றனர் — இவைகளெல்லாம் சாத்தானிய ஏதுகரங்களின் கிரியைகளாகும். — Ev 26 (1903).கச 85.1

    துன்மார்க்கர், அறக்கட்டளை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் குழுக்களுடன் சேர்ந்து கட்டுகளாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட ஸ்தாபனங்களுடன் நாம் எவ்விதத்திலும் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளாதிருப்போமாக, தேவனே நமது அதிபதி: நமது அதிகாரி. உலகத்தைவிட்டு வெளியே வந்து பிரிந்திருக்கும்படியாக நம்மை அவர் அழைக்கின்றார். “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து பறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகின்றார்” (2 கொரி. 6:17). நாம் இதைச்செய்ய மறுப்போமானால், உலகம் பார்க்கின்றபடி நாமும் எல்லாக்காரியத்தையும் பார்த்துக்கொண்டிருப்போமானால், நாமும் உலகத்தாரைப்போல் மறிவிடுவோம். உலகக் கொள்கைகளும், உலகக் கருத்துகளும் நம்முடைய நடவடிக்கைகளை ஆட்சி செய்யும்போது, நித்திய சத்தியத்தின் உயர்ந்த பரிசுத்தமான மேடையின்மீது நாம் நிற்க இயலாது. — 4BC 1142 (1903).கச 85.2