Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நீங்களே மீட்பரின் பிரதிநிகள்!, ஏப்ரல் 14

    “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப் படுத்தும்படி, நீங்கள் அவர்களுகுள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்..” — பேதுரு 2:12.Mar 207.1

    கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக்கொண்டிருப்பவர்கள், அவருடைய பிரதிநிதிகளாயிருந்து, அவருக்காகப் பேசவேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார்…. அவர்கள் யாரையெல்லாம் சந்திக்கின்றார்களோ, அவர்கள் அனைவருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கத்தக்கதாக, பரிசுத்தமாக்கப்பட்ட-தூய்மையாக்கப்பட்ட-புனிதமான — மக்களாக அவர்கள் இருக்கவேண்டும்.Mar 207.2

    கிறிஸ்துவின் பின்னடியார்கள் தங்களது கொள்கைகளிலும், தங்களது விருப்பம்சார்ந்த காரியங்களிலும், உலகத்தினின்று பிரிந்து வாழ்பவர்களாக இருக்கவேண்டும்; ஆனால், அவர்கள் தங்களை முற்றிலுமாக உலகத்தினின்று ஒதுக்கிவைத்துக்கொள்ளக்கூடாது. இரட்சகர் மனிதரோடு கலந்து ஒன்றுசேர்ந்து வாழ்ந்தார். தேவனுடைய சித்தத்திற்கு முரணான எந்தக் காரியத்தையும் செய்வதற்கு அவர்களை உற்சாகப்படுத்தாமல், அவர்களை அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தவும் உயர்த்தவும் கலந்து வாழ்ந்து வந்தார். “அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவகளாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்” (யோவான் 17:19) என்று இயேசு உறுதியாகக் கூறினார்ல்; ஆகவே, தெய்வீக நறுமணமானது, உப்பைப்போன்று, உலகத்தைக் கேட்டினின்று பாதுகாப்பதற்காக, மக்கள் மத்தியிலே கிறிஸ்தவன் தங்கி வாழ வேண்டும்.Mar 207.3

    ஒரு உயர்வான — தூய்மையான — மேன்மையான வாழ்க்கையினின்று வெளிப்படும் வல்லமையே நமது மாபெரும் தேவையாகும். கிறிஸ்தவர்களென்று தங்களை அழைத்துக்கொள்பவர்களால், என்ன பயன்கள் இந்த உலகத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்பதைக் காண்பதற்கு, இந்த உலகம் அவர்களை விழிப்புடன் கவனித்துக் கொண்டிருக்கிறது… நாம் யாரோடெல்லாம் பழகுகின்றோமோ அவர்களனைவருடைய உள்ளங்களிலும், வேதாகம மார்க்கத்தைப் பற்றி சாதகமான அல்லது பாதகமான எண்ணப்பதிவுகள் தொடர்ந்து நிகந்துகொண்டிருக்கின்றன.Mar 207.4

    மேலும், தேவனும் தூதர்களும் கூர்ந்து கவனித்திக்கொண்டிருக்கின்றனர். உலகப்பற்றுள்ள நிலையில் இருப்பதைவிட கிறிஸ்தவமானது மேன்மையானதென்றும், அவர்கள் ஒரு உயர்வான பரிசுத்தமான நிலையிலே ஊழியஞ்செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும். அவரது மக்கள் தங்களது ஜீவியங்களின்மூலமாகக் காட்டவேண்டுமென்றும் தேவன் விரும்புகிறார். தாங்கள் ஏற்றுக் கொண்ட சத்தியானது தங்களைப் பரலோக இராஜாவின் பிள்ளைகளாக மாற்றியிருக்கிறது என்பதை, அவர்களது வாழ்க்கையில் வெளிப்படுத்துவதைக் காணவேண்டுமென்று அவர் ஏங்குகிறார். தமது எல்லையற்ற அன்பும் இரக்கமும் பாய்ந்தோடத்தக்கதான வாய்க்கால்களாக அவர்கள் அமையவேண்டுமென அவர் ஏங்குகிறார்.Mar 208.1

    தமது சபையிலே, தாம் வெளிப்படுத்தப்படவேண்டுமென்பதற்காக ஏக்கமுள்ள ஆர்வத்தோடு கிறிஸ்து காத்துக்கொண்டிருக்கிறார். மீட்பரின் குணமானது, அவரது மக்களிலே பூரணமாக உருவாக்கிக் காட்டப்பட்டபின்னர், அவர் தமக்குச் சொந்தமானவர்களை உரிமைகோரிப் பெற்றுக்கொள்ள வருவார். நமது ஆண்டவருடைய வருகைக்காக நோக்கிக்கொண்டுமட்டும் இருக்காமல், அதைக் துரிதப்படுத்துவது ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய சிறப்புரிமையாகவுமிருக்கிறது. அவரது பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் அவருடைய மகிமைக்காக கனிகொடுப்பார்களானால், சுவிசேஷ விதையானது எவ்வளவு துரிதமாக உலகம் முழுவதிலும் விதைக்கப்பட்டுவிடும்! வெகு சீக்கிரத்தில் கடைசி மாபெரும் அறுவடையும் முதிர்ந்துவிடும்! கிறிஸ்துவும் வந்து விடுவார்!⋆Mar 208.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 208.3

    “நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்.” - வெளிப்படுத்தல் 2:10.Mar 208.4