Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பட்டணத்திற்கு வெளியே தங்கியிருந்து பட்டணங்களில் ஊழியஞ்செய்தல்!, ஜூன் 25

    “...நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப்பிரிந்து போய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். - 2 கொரிந்தியர் 6:17.Mar 351.1

    தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும் மக்களாக இருப்பதால், நாம் பட்டணங்களைவிட்டு கண்டிப்பாக வெளியேற வேண்டும். ஏனோக்கு செய்ததைப்போல் நாம் பட்டணங்களில் வேலை செய்யவேண்டும்; ஆனால், அங்கு தங்கி வாழக்கூடாது.Mar 351.2

    கூடியமட்டும் நமது நிறுவனங்கள் பட்டணத்தைவிட்டு வெளியே அமைக்கப்படவேண்டும். அவரது மக்கள் பட்டணங்களில் குடியிருக்கவேண்டுமென்பது தேவனின் சித்தமல்ல; ஏனெனில், அங்கு கலவரங்களும் குழப்பங்களுமே தொடர்ந்து காணப்படும். அவர்களது பிள்ளைகள் அதினின்று காப்பாற்றப்படவேண்டும்; ஏனெனில், அமைப்பு முழுவதுமே பரபரப்பினாலும், வேகத்தினாலும், கூச்சலினாலும் சீர்குலைந்து கிடக்கிறது. தமது மக்கள் நாட்டுப்புறங்களுக்குச்சென்று, நிலத்திலே குடியிருக்க வீடுகட்டி, தங்களது சொந்த பழமரங்களையும் காய்கறிகளையும் பயிற்செய்து, இயற்கையின் தொடர்பிலே நேரடியாக தேவனுடைய பணியைச் செய்யவேண்டுமென்று ஆண்டவர் விரும்புகின்றார். உங்களது குடும்பங்களை பட்டணத்தைவிட்டு வெளியே அழைத்துச் செல்லுங்கள் என்பதே என்னுடைய தூது.Mar 351.3

    மனிதர் கேட்டாலும் சரி அல்லது பொறுத்துக்கொண்டாலும் சரி(விருப்பமின்றி),சத்தியம் சொல்லப்படவேண்டும். பட்டணங்கள் சோதனைகளால் நிறைந்திருக்கின்றன. இத்தகைய தூய்மைக் கேட்டினின்று எவ்வளவு தூரத்திற்கு நம்முடைய வாலிபர்களைக் காப்பாற்றமுடியுமோ அத்தகையவிதத்தில், ,அவர்களைக் காப்பாற்ற நமது ஊழியத்தைத் திட்டஞ்செய்யவேண்டும். வெளியிடங்களில் தங்கி, பட்டணங்களில் ஊழியஞ்செய்யப்பட வேண்டும். பட்டணங்களுக்கு எச்சரிப்பு கொடுக்கப்படவேண்டாமா? ஆம், பட்டணங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களால் அல்ல. அவர்களைப் போய் சந்தித்து, பூமியின்மீது வந்துகொண்டிருக்கிற ஆபத்துக்களைக் குறித்து எச்சரிப்புக் கொடுப்பவர்களால்தான் இவ்வாறு செய்யப்பட வேண்டுமென்று தேவனுடைய தூதுவர் கூறுகிறார். ஒரு நாட்டிலே அக்கிரமம் பெருகும்போது, சோதோமிலே லோத்தின் குரல் கேட்டது போல, போதனையும் எச்சரிப்பும் கொடுக்கும் சத்தம் எப்பொழுதும் கேட்கப்படட்டும். லோத்துமட்டும் இந்த துன்மார்க்கமான கேடுகள் நிறைந்த பட்டணத்தில் தனது குடும்பத்தை வைத்திராதிருந்தால், அவன் அவர்களை நிச்சயமாகப் பாதுகாத்திருக்கமுடியும். லோத்தும் அவனது குடும்பமும் பட்டணத்திலிருந்து சற்று தூரத்தில் வாழ்ந்திருந்தால்கூட, வெளியே சோதோமிலேசெய்த காரியங்களைச் செய்திருக்க முடியும். ஏனோக்கு தேவனோடு நடந்தான். ஒவ்வொரு விதமான துன்மார்க்கத்தாலும் கலகங்களாலும் நிறைந்த பட்டணத்தின் மத்தியிலே சோதோமில் லோத்து வாழ்ந்ததுபோல, அவன் (ஏனோக்கு) வாழவில்லை.Mar 351.4

    ஏனோக்கு துன்மார்க்கர் இருக்கும் இடத்திலே வீடுகட்டிக் குடும்பம் நடத்தவில்லை…எங்கு சூழ்நிலையானது எவ்வளவிற்கு அதிகமாகத் தூய்மையாக இருக்குமோ, அங்கு தன்னையும் தனது குடும்பத்தையும் வைத்துக்கொண்டான். சில சமயங்களில் உலகத்தின் குடிகள் வாழ்ந்துகொண்டிருக்கும் இடங்களுக்கு தேவன் கொடுத்த தூதைக் கொடுக்கும்படிச் சென்றான்…அவன் தனது தூதுகளை கொடுத்தபின்னர், எப்பொழுதுமே தான் இளைப்பாறுமிடத்திற்கு தன்னுடன் அழைத்துச்சென்றான்.⋆Mar 352.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 352.2

    “ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைகொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்…” - உபாகமம் 7:9.Mar 352.3