Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய தொழிற்பட்டறையில் வடிவமைக்கப்படல்! , மார்ச் 13

    “உங்களது சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறது என்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறிவீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.” - 1 கொரிந்தியர் 6:19,20 Mar 143.1

    நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. மிக அதிகமான விலைக்கிரயத்தால் நாம் கொள்ளப்பட்டிருக்கிறோம். தேவகுமாரனுடைய பாடும், மரணமுமே அந்தக் கிரயம், இதை நாம் புரிந்துகொள்வோமானால், நம்மீது ஒரு மாபெரும் பொறுப்பு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்வோம்; அதாவது, தேவனுக்கு முழுநிறைவான சேவைசெய்யத்தக்கதாக, ஒரு சிறந்த ஆரோக்கிய நிலையிலே நாம் நம்மை வைத்துக்கொள்வோம்..Mar 143.2

    ஒரு சந்தேகமுமின்றி கிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார் என்று நாம் விசுவாசிக்கின்றோம்.. நமக்கு ஒரு சந்தேகமுமில்லை. இன்று நாம் கடைபிடிக்கும் கொள்ளைகள்தான் நிகழ்கால சத்தியம் என்பதில் பல ஆண்டுகளாக நமக்கு ஒரு சந்தேகமுமில்லை; மேலும், நியாயத்தீர்ப்பை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்று காரியத்திலும் சந்தேகமில்லை. உத்தமமாகவும் நீதியாகவும் இருக்கிறவர்களுக்கு, சாவாமை என்னும் அந்த இறுதிப் பங்களிப்பைக்கொடுப்பதற்காக, பரிசுத்த தூதர்களின் பரிவாரத்தால் அழைத்துவரப்பட்டு, வானத்தின் மேகங்களிலே காணப்படவிருக்கின்ற அவரைச் சந்திப்பதற்காக, நாம் ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம். அவர் வருகிறபொழுது, நமது பாவங்களினின்று நம்மைச் சுத்திகரிப்பதற்காகவோ, நமது குணங்களிலுள்ள குறைவுகளை அகற்றுவதற் காகவோ, நமது மனப்போக்குகளிலும், நமது குணங்களிலுமுள்ள குறைபாடுகளைச் சரிப்படுத்துவத்ரற்காகவோ, அவர் இரண்டாம் முறை இவ்வுலகத்திற்கு வருகிறதில்லை. இவைகள் நமக்காக நிச்சயமாக செய்யப்பட்டே ஆகவேண்டுமானால், அந்த வேலை அதற்குமுன்னரே நிறைவேற்றப்பட்டு முடிந்திருக்கும்.Mar 143.3

    ஆண்டவர் மீண்டும் வரும்பொழுது, பரிசுத்தமாயிருப்பவர்கள் இன்னும் பரிசுத்தமாயிருப்பார்கள். தங்களது சரீரங்களையும் குணங்களையும் தூய்மையிலும் பரிசுத்தத்திலும் மேன்மையிலும் காத்துக்கொண்டவர்கள் இறுதியில் சாவாமை எனப்படும் அந்தத் தொடுதலில் பங்கடைவார்கள், ஆனால் அநீதயுள்ளவர்களாகவும், பரிசுத்தமற்றவர்களாகவும் தீட்டுள்ளவர்களாகவும் இருந்தவர்கள் அப்படியே என்றும் (அழிக்கப்படும் வரை) இருப்பார்கள். அவர் இரண்டாம் முறையாக வரும்பொழுது, மக்களுடைய குணங்களில் காணப்படும் குறைவுகளை நீக்கவும், பரிசுத்த குணங்களை அவர்களுக்கு வழங்கவுந்தக்கதாக எந்த வேலையும் நடைபெறுவதில்லை ... அவை அனைத்தும் இந்தத் தவணையின் கால மணிவேளைகளிலே செய்யப்படவேண்டும். இப்பொழுதே நமக்காக அந்த வேலை நிறைவேற்றப்பட வேண்டும்.Mar 144.1

    நாம் இப்பொழுது தேவனுடைய தொழிற்பட்டறையிலே இருக்கின்றோம். நம்மில் அநேகர் கல்குவாரியிலிருந்து எடுக்கப்பட்ட கரடுமுரடான கற்களைப்போலிருக்கின்றோம்; ஆனால், தேவனுடைய சத்தியத்தை நாம் பற்றிப்பிடித்துக்கொள்வோமானால், அதின் செல்வாக்கு நம்மிலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நம்முடைய ஒவ்வொரு குற்றங்களையும் பாவங்களையும், அவைகள் எப்படிப்பட்ட தன்மையுடையவைகளாக இருந்தாலும், நம்மிடமிருந்து அகற்றிப்போட்டு நம்மை உயர்த்துகிறது; இவ்வாறாக, நாம் இராஜாவை அவரது அழகிலே பார்ப்பதற்கும் மகிமையின் இராஜ்யத்திலே, பரலோகத்தின் பரிசுத்த தூதர்களோடு இறுதியில் இணைந்துகொள்வதற்கும் ஆயத்தமாக்கப்படுகிறோம். நமது சரீரங்களும், குணங்களும், சாவாமையைத் தரித்துக்கொள்ளத்தக்கதான இந்த வேலையானது, இந்த உலகத்திலே நமக்காக நிறைவேற்றப்பட வேண்டும்.⋆Mar 144.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 144.3

    “கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.” - சங்கிதம் 128:1.Mar 144.4