Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனின் முத்திரையும் மிருகத்தின் முத்திரையும்!, ஜூலை 22

    “சாட்சி ஆகமத்தைக் கட்டி,என் சீடருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு” என்றார். — ஏசாயா 8:16Mar 405.1

    தவணையின் கால முடிவிற்கு முன்னர், உயிரோடிருக்கும் நீதிமான்கள் தேவனுடைய முத்திரையைப் பெற்றுக்கொள்வார்கள்.Mar 405.2

    ஆண்டவரின் படைப்பின் நினைவுச்சின்னமான அடையாளம் அல்லது முத்திரையானது, ஏழாம் நாள் ஓய்வுநாள் ஆசரிப்பில் தான் வெளிப்படும். இதற்கு எதிரானது, மிருகத்தின் முத்திரையாகும்; அதுவே வாரத்தின் முதல்நாள் ஆசரிப்பாகும்.Mar 405.3

    ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பானது இன்னும் மிருகத்தின் முத்திரையாகவில்லை. இந்த விக்கிரகமாகிய ஓய்வுநாளை மனிதர் வணங்கத்தக்கதாக, சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்வரை, அது மிருகத்தின் முத்திரையாக இருக்காது. அந்த நாள் ஒரு பரீட்சையாக அமைகின்ற நேரம் வரும்; அந்த நேரம் இன்னுமும் வரவில்லை.Mar 405.4

    இதுவரை எவரும் மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்ளவில்லை. அந்தச் சோதனைக்காலம் இன்னும் வரவில்லை. ரோமன் கத்தோலிக்க சபையையும் சேர்ந்து அனைத்து சபைகளிலும் உண்மையான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெளிச்சம் கிடைத்து, அந்த நான்காம் கற்பனைக்குரிய கடமையை அறியும்வரை, அவர்கள் கண்டனஞ்செய்யப்படமாட்டார்கள். போலியான ஓய்வுநாளை, நடைமுறைப்படுத்துவதற்காக சட்டம் இயற்றப்படும் பொழுது, பொய்யான ஓய்வுநாளிற்கும் உண்மையான ஓய்வுநாளிற்கும் இடையே உள்ள கோடானது தெளிவாகப் போடப்பட்டுவிடும். பின்னரும் தொடர்ந்து மேலும் மீறுதலிற்குள்ளாக இருப்பவர்கள், மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்வார்கள். நான்காம் கற்பனையின் ஓய்வுநாளை வெளிப்படுத்தி, சத்தியத்தின் வெளிச்சமானது உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்குமானால், ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பிற்கு தேவனுடைய வார்த்தையிலே எத்தகைய அடித்தளமும் இல்லை என்று காணப்பட்டிருக்குமானால், அதன் பிறகும், “என்னுடைய பரிசுத்த நாள்” என்று தேவனால் அழைக்கப்படுகின்ற அந்த நாளைக் கைக்கொள்ள மறுத்து, இன்னமும் பொய்யான ஓய்வுநாளையே பிடித்துக்கொண்டிருப்பீர் ளானால், நீங்கள் மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்வீர்கள். இந்தக் காரியம் எப்பொழுது நடைபெறுகிறது? ஞாயிற்றுக்கிழமையில் வேலையைச் செய்யாமல், ஓய்ந்திருக்கச் சொல்லும் சட்டத்திற்கு நீங்கள் கீழ்ப்படியும்பொழுது, வேதத்திலே ஞாயிற்றுக்கிழமையானது சாதாரண வேலைநாள் என்பதைத்தவிர, வேறொரு வார்த்தையும் கூறப்படாதிருக்கும்பொழுது, நீங்கள் அந்த நாளை ஓய்வுநாளாக நினைத்து, தேவனைத் தொழுதுகொண்டால், நீங்கள் மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்ள சம்மதித்துவிட்டீர்கள் என்பதே அதற்குப் பொருளாகும்; ஆகையால், தேவனுடைய முத்திரையைப் பெற மறுத்துவிட்டீர்கள் என்பதே அதன் பொருளாகும்.Mar 405.5

    வெகு சீக்கிரத்தில் தேவனுடைய ஒவ்வொரு பிள்ளையின்மீதும் தேவனுடைய முத்திரை வைக்கப்படும், ஆ! அது நமது நெற்றிகளின் மீது வைக்கப்படலாமே! தேவனுடைய ஊழியக்காரர்களின் நெற்றிகளின் மீது முத்திரைபோடுவதற்காக, தூதன் செல்லும் பொழுது, நமக்கு முத்திரை போடாமல் கடந்துசென்றுவிட்டான் என்ற நினைவை யாரால் தாங்கிக்கொள்ள முடியும்?⋆Mar 406.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 406.2

    “உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்: ஒரு வழியாய் உனக்கு எதிராகப் பறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிபோவர்கள்.” - உபாகமம் 28:7.Mar 406.3