Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆவிக்குரிய உயர்ந்த நிலை முயன்று அடையக்கூடியது!, ஆகஸ்டு 5

    “வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவராயிருக்கிறார்” - யூதா: 24.Mar 433.1

    பிரமாணத்தின் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் கிறிஸ்து கீழ்ப்படிந்தார்…அவரது பூரணமான கீழ்ப்படிதலினாலே ஒவ்வொரு மானிடனும் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிவதை அவர் சாத்தியாமாக்கினார். நாம் நம்மை கிறிஸ்துவிற்கு அர்ப்பணிக்கும்போது, இதயமானது அவரது இதயத்தோடு இணைக்கப்படுகிறது. சித்தமானது அவரது சித்தத்தோடு கலந்துவிடுகிறது; மனமானது அவரது மனதோடு ஒன்றாகிவிடுகிறது; சிந்தனைகள் அவருக்குக் கட்டுப்பட்ட நிலைக்குக் கொண்டுவரப்படுகின்றன. அவரது வாழ்க்கையைப்போன்று நமது வாழ்க்கை அமைந்துவிடுகிறது. அவரது நீதியன் உடைகளை நாம் தரித்திருப்பது என்பதின் பொருள் இதுவே. இச்சமயத்தில் அவர் நம்மைப் பார்க்கும்பொழுது, அத்தி இலைகளால் தைக்கப்பட்ட உடைகளை அல்ல, நமது நிர்வாணத்தையும் நமது பாழ்பட்டுப்போன நிலையையுமல்ல, தமது சொந்த நீதியின் ஆடையையே பார்க்கிறார்; அதுவே, யேகோவாவின் பிரமாணத்திற்கான முழுமையான கீழ்ப்படிதலாகும்.Mar 433.2

    மீட்பின் திட்டத்தின்மூலமாக, ஒவ்வொரு பாவக் குணத்தையும் கட்டுப்படுத்தவும், எவ்வளவு வலுவான சோதனையானாலும் அனைத்து சோதனைகளையும் எதிர்த்து நிற்கவும் வழிவகைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.Mar 433.3

    மிகவும் வலுவான சோதனை பாவஞ்செய்வதற்கான ஒரு சாக்குப்போக்கு அல்ல. எவ்வளவு பெரிய அழுத்தம் ஆன்மாவின் மீது கொண்டுவரப்பட்டாலும், மீறுதலானது நமது சொந்தச்செயலாகவே இருக்கிறது. எவரையும் பாவஞ்செய்வைப்பதற்கு கட்டாயப்படுத்துவதற்காக பூமி, பாதாளம் ஆகியவைகளில் எந்த வல்லமையும் கிடையாது. நமது சித்தமானது சம்மதிக்க வேண்டும். இதயம் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும். இச்சையானது பகுத்தறிவை குலையச் செய்யமுடியாது; நீதியின்மீது அக்கிரமம் வெற்றிகொள்ள முடியாது.Mar 433.4

    அவரது சேவையை உத்தமமாகச் செய்தவர்களாக, அந்த இம்மானுவேல் இளவரசனின் இரத்தந்தோய்ந்த கொடியின்கீழ் நிற்பவர்களானால், நீங்கள் ஒருபோதும் சோதனைக்கு வளைந்து கொடுக்கவேண்டிய அவசியமில்லை. உங்களது அருகிலே நின்று கொண்டிருக்கின்ற அவர், நீங்கள் விழாதபடி உங்களைக் காப்பாற்ற வல்லவராக இருக்கிறார்.Mar 434.1

    பாவம் நிறைந்த ஒரு மனப்பாங்கையுங்கூட நீங்கள் விடாமல் வைத்துக்கொண்டிருக்க அவசியமில்லை…(எபேசியர்:1-6).Mar 434.2

    நாம் அவரது தெய்வீகத் தன்மையில் பங்குகொள்ளும்போது, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகின்ற, மற்றும் நம்மால் பேணிவளர்க்கப்பட்ட, தவறுசெய்கின்ற மனப்பாங்குகள், நமது குணத்திலிருந்து துண்டித்து வெளியேற்றப்படுகின்றன. நன்மையையே செய்வதற்காக ஒரு ஜீவனுள்ள வல்லமையாக நாம் மாற்றப்படுகிறோம். அந்த தெய்வீகப் போதகரிடமிருந்து எப்பொழுதும் கற்றுக்கொண்டு, அவரது சாயலில் ஒவ்வொரு நாளும் பங்குபெற்று, இவ்வாறு சாத்தானின் சோதனைகளை மேற்கொள்வதற்கு, நாம் தேவனோடு ஒத்துழைக்கிறோம். கிறிஸ்து தேவனோடு ஒன்றாக இருப்பதுபோல, மனிதனும் கிறிஸ்துவோடு ஒன்றாக இருக்கத்தக்கதாக தேவன் கிரியைசெய்கிறார். மனிதனும் கிரியைசெய்கிறான். அதன்பிறகு, பரலோக வாசஸ்தலங்களிலே கிறிஸ்துவோடு நாம் ஒன்றாக அமர்ந்திருப்போம். இயேசுவிலே நிச்சயத்தோடும் சமாதானத்தோடும் மனம் இளைப்பாறுதலைப் பெறுகிறது.⋆Mar 434.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 434.4

    “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.” - பிலிப்பியர் 2:13.Mar 434.5