Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ஜனவரி

    இயேசு பெருமானின் முதல் வருகை!, ஜனவரி 1

    “நம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிராமணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப் பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்” - கலாத்தியர் 4:4,5Mar 1.1

    மீட்பரின் வருகையானது ஏதேனிலே முன்னுரைக்கப்பட்டது. ஆதாமும் ஏவாளும் முதன்முதலாக இந்த வாக்குத்தத்தத்தைக் கேட்ட பொழுது, அதின் துரிதமான நிறைவேறுதலை ஆவலோடு எதிர் பார்த்தார்கள். மகிழ்ச்சியோடு தங்களது முதற்பேறான மகனை வரவேற்றார்கள். அவன்தான் வரப்போகின்ற விடுதலை வீரன் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்தார்கள்; ஆனால், அந்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதல் தாமதித்தது. அந்த வாக்குத்தத்தத்தை முதலாவது பெற்றவர்கள் அதின் நிறைவேறுதலைக் காணாமலேயே மரணமடைந்தார்கள். ஏனோக்கின் நாட்களிலிருந்து முற்பிதாக்கள், தீர்க்கதரிசிகள் ஆகியோர்மூலமாக அவர் வெளிப்படும் நாளில் குறித்த நம்பிக்கையையே உயிரோட்டமானதாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று மீண்டும்மீண்டும் கூறப்பட்டது; எனினும், அவர் வரவில்லை. தானியேல் தீர்க்கதரிசனம் அவரது முதலாம் வருகையின் காலத்தை வெளிப்படுத்தியது; ஆனால் அநேகர் இந்தத் தூதின் சரியான உட்பொருளை விளக்கிக் காட்டவில்லை. ஒவ்வொரு நூற்றாண்டாக கடந்துசென்றது. தீர்க்கதரிசிகளின் குரல்களும் அடங்கிப்போயின. ஒடுக்குகிறவனுடைய கரம் இஸ்ரவேல் மக்களை ஆழ்த்தியது. “... நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும்” (எசேக்கியல் 12:22) என்று அநேகர் வியப்புடன் கூறுவதற்கு ஆயுத்தமாகிவிட்டார்கள். Mar 1.2

    தங்களுக்கு நியமிக்கப்பட்ட மாபெரும் சுற்றுப்பயணத்திலே செல்லுகின்ற நட்சத்திரங்களைப்போன்றே, தேவனுடைய நோக்கங்களில் எந்தவித அவசரமோ தாமதமோ கிடையாது. காரிருள் மற்றும் புகைகிற சூளை ஆகிய அடையாளங்களின்மூலமாக இஸ்ரவேலர் எகிப்திலே அனுபவிக்கப்போகும் அடிமைத்தனத்தைக்குறித்து தேவன் ஆபிரகாமிற்கு வெளிப்படுத்தியிருந்தார். அவர்கள் அந்த இடைப்பட்ட காலத்திலே, நானூறு ஆண்டுகள் அங்கே தங்கி இருக்கவேண்டுமென்று உறுதியாகக் கூறியிருந்தார். “...பின்பு மிகுந்த பொருட்களுடனே புறப்பட்டு வருவார்கள்” (ஆதியாகமம் 15:14) என்று கூறினார். அந்த வார்த்தைக்கு எதிரக இறுமாந்திருந்த பார்வோனது பேரரசின் அனைத்து சக்திகளும் ஒருங்கிணைந்து வீணாகப் போரிட்டன. தெய்வீக வாக்குத்தத்தத்தின்படி நியமிக்கப்பட்ட, “நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றையதினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது” — யாத். 12:41; எனவே, பரலோக ஆலோசனை மன்றத்திலே கிறிஸ்துவின் முதல் வருகைக்கான வேலை தீர்மானிக்கப்பட்டாயிற்று. காலத்தைக் காட்டும் அந்த மாபெரும் கடிகாரமானது, அந்த வேலையைச் சுட்டிக் காட்டியபோது, இயேசு பெத்லகேமில் பிறந்தார்.Mar 1.3

    காலம் நிறைவேறியபோது, தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார். விடுதலை வீரரின் வருகையை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக பக்குவநிலையை அடையும்வரை, இறைவனின் அருளானது, ஜாதிகளின் எழுச்சிகளையும், மானிட உந்துவேகம், செல்வாக்கு ஆகியவற்றின் ஏற்ற-இறக்கங்களையும் சீரமைத்து இயங்கச்செய்தது...Mar 2.1

    மனிதரில் அவனைப் படைத்தவரின் சாயலை மீண்டும் புதுப்பிக்கத்தக்கதாக இயேசு வந்தார். பாவத்தினால் கெட்டுச் சீரழிந்து போன குணநலன்களை கிறிஸ்து மாத்திரமே புதியதாக உருவாக்க முடியும். சித்தத்தை அடக்கியாண்டுகொண்டிருந்த தீய சக்திகளை வெளியேற்ற அவர் வந்தார். குப்பையினின்று நம்மைத் தூக்கி எடுக்கவும், முற்றிலுமாகப் பாழ்பட்டுப்போன குணத்தைத் திருத்தியமைக்கவும், அந்தக் குணத்தை அவரது தெய்வீகக் குணத்தின் மாதிரியைப்போன்று, அவரது சொந்த மகிமைக்கேற்ற அழகிலே சீர்படுத்தவும் அவர் வந்தார்! ⋆Mar 2.2

    வாக்குத்தத்த வசனம்:Mar 2.3

    “தீர்க்கதரிசனமில்லாத இடத்தில ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்; வேகத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.” - நீதிமொழிகள் 29:18.Mar 2.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents