Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    திருப்தியளிக்கக்கூடிய அந்த விருந்து!, பிப்ரவரி 7

    “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.” - மத்தேயு 5:6.Mar 75.1

    தங்களது குறைவுபட்டதும் ஊனமுற்றதுமாயிருக்கிற தெய்வீகக் காரியங்களில் மனநிறைவுகொள்ளும் மக்கள், ஒவ்வொரு ஆத்துமாவும் அன்பினால் நிறைந்துமுள்ள, பூரணமும், பரிசுத்தமும், உயர்ந்ததுமான பரலோகத்தைக் காணத்தக்கதாக திடேரென்று அங்கு கொண்டுசெல்லப்பட்டால், அவர்கள் பரலோக மக்கள் கூட்டத்துடன் கலந்திருக்கவோ, அவர்களது பாடைகளில் பங்குகொள்ளவோ அல்லது தேவனிடமிருந்தும் ஆட்டுக்குட்டியானவரிடமிருந்தும் புறப்படுகிறதான பரிசுத்தமும், உயர்ந்ததும், ஊடுருவிச்செல்லக் கூடுயத்துமான மகிமையை எதிர்கொள்ளவோ முடியுமா? ஆ! அது முடியது!...Mar 75.2

    ஆவிக்குரிய காரியங்களில் மகிழ்ச்சிகொள்ளும்படி தங்கள் மனதைப் பழக்கினவர்களே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். அதின் கற்பனைக்கெட்டாத மகிமையினாலும், பரிசுத்தத்தினாலும் மூழ்கடிக்கப்பட்டுவிடமாட்டார்கள். நீங்கள் நல்ல கலை அறிவு உள்ளாவர்களாயிருக்கலாம்; நீங்கள் இசையில் சிறந்து விளங்கலாம்; நல்ல எழுத்தாளராயிருக்கலாம்; உங்கள் நடத்தை உங்களைச் சேர்ந்தவர்களுக்கு இனிமையாயிருக்கலாம்; ஆனால் பரலோகிற்கு ஆயத்தப்படுவதில் இவைகளுக்கு என்ன பங்கு இருக்கிறது? தேவனின் நியாயாசனத்தின்முன் நிற்க நீங்கள் ஆயத்தப்படுவதில் அவைகள் என்ன பங்கை வகிக்கின்றன?Mar 75.3

    “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மை பரியாசம் பண்ண வொட்டார்”(கலாத்தியர் 6:7) பரிசுத்தமேயன்றி வேறொன்றும் உங்கலை பரலோகிற்கு ஆயத்தப்படுத்துவதில்லை. உண்மையுள்ள, நடைமுறைப்படுத்தப்பட்ட தேவபக்தி மாத்திரமே உங்களுக்கு தூய்மையான மேம்பட்ட குணனலன்களையளித்து, ஒருவரும் சேரக்கூடாதிருக்கிற ஒளியில் வாசஞ்செய்கிற தேவனுடைய பிரசன்னத்திற்குள் பிரவேசிக்கத் தகுதியுள்ளவர்களாக்கும். பரலோகக் குணாதிசயத்தை இந்த பூமியிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது ஒருபோதும் அதைப்பெற்றுக்கொள்ள முடியது.Mar 75.4

    நற்குணம், உண்மையான பரிசுத்தம் ஆகியவைகளை வாஞ்சித்து முயற்சி எடுக்கும்வரை சரிதான், ஆனால் அத்துடன் நின்றுவிட்டால் அதில் ஒரு பயனுமில்லை. நல்ல நோக்கங்கள் சரிதான்; ஆனால், அவைகள் தீர்மானத்துடன் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், அவைகள் பலன் ஒன்றும் அளிக்கப்போவதில்லை. பலர் கிறிஸ்தவர்களாக வாழ வாஞ்சித்து, காத்திருக்கும்போதே உண்மையான முயற்சியும் எடுக்கவில்லை; எனவே, அவர்கள் தராசில் நிறுக்கப்பட்டு குறையக் காணப்படுவார்கள். சித்தமானது சரியான வழியில் செயல்படுத்தப்படவேண்டும். முழுமனதுடைய கிறிஸ்தவரிகளாகயிருப்போம். பூரண அன்பின் நீளம், அகலம், உயரம், ஆழம் ஆகியவைகளை அறிந்துகொள்வோம்.Mar 76.1

    “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” என்னும் இயேசுவின் வார்த்தைகளுக்கு மிகவும் கவனமாகச் செவிக்கொடுங்கள்; நீதியின்மேல் பசிதாகமுள்ள ஆத்துமாக்களை திருப்தியாக்க கிறிஸ்துவால் அதிகமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.⋆Mar 76.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 76.3

    “பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்.” - ஏசாயா 58:10.Mar 76.4