Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஒரு சிறிது கால சமாதானம்!, செப்டம்பர் 8

    “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறது போல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.” - 1 தெசலோனிக்கேயர் 5:3.Mar 501.1

    மீட்பின் ஊழியம் முடிவடையும்பொழுது, இப்பூமியின்மேல் இக்கட்டு வந்து சேரும்; அப்பொழுது, நாடுகள் ஒன்றுகொன்று விரோதங்கொள்ளும்; என்றாலும், மூன்றாம் தூதனின் வேலையை தடைசெய்யாதபடிக்கு, அந்நாடுகள் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படும்; மேலும் மூன்றாம் தூதனின் தூதிற்கு வல்லமை வழங்கவும், கடைசி ஏழு வாதைகள் ஊற்றப்படும்போது, பரிசுத்தவான்கள் நிலைத்து நிற்பதற்கு ஆயத்தமடையதக்கதாகவும், பின்மாரிதேவசமூகத்திலிருந்து ஊற்றப்படும்.Mar 501.2

    உலகவாசிகள் முழுமையான குழப்பத்திலிருக்கிறதை நான் கண்டேன். யுத்தம், இரத்தம் சிந்துதல், தனிமை, வறுமை, பஞ்சம், கொள்ளைநோய் ஆகிய அனைத்தும் தேசமெங்கும் வந்திருந்ததைக் கண்டேன். தேவ மக்களை இவைகள் சூழ்ந்துகொண்ட போது, அவர்கள் தங்களிடமிருந்த சிறிய சிறிய பாரங்களையும் களைந்து போடத்தக்கதாக, ஒருவருக்கொருவர் நெருங்கி வந்தனர்; இதுவரை இருந்த சுய கௌரவம் செயலிழந்துபோனது; அந்த இடத்தை மனத்தாழ்மை பிடித்துக்கொண்டது. பாடுகள், கலக்கம், தனிமை எல்லாம் மனதை ஆட்கொள்ள, உணர்வுகளுக்கு அடிமைப்பட்டிருந்த விவேகமற்ற மனிதன், அறிவடைந்து ஞானமாக-புத்தியாகச்செயல்பட்டான்.Mar 501.3

    என் கவனம் இந்த நிகழ்ச்சியிலிருந்து திசைதிருப்பப்பட்டது. மிகச் சொற்பமான சமாதானகாலமே இருந்ததைப்போலத் தெரிந்தது; மீண்டும் அனைத்தும் உச்சக்கட்ட குழப்பத்திலிருந்தன. சண்டை, யுத்தம், இரத்தஞ்சிந்தல், பஞ்சம், கொள்ளைநோய் தீவிரமாக எல்லா இடங்களிலும் காணப்பட்டன. மற்ற நாடுகளும் இந்தக் குழப்பத்திலும் யுத்தத்திலும் பங்கெடுத்துக் கொண்டன. யுத்தத்தினால் பஞ்சம் ஏற்பட்டது. வறுமையும் இரத்தம் சிந்தும் நடவடிக்கையும் கொள்ளை நோயை உண்டாக்கியது; அப்போது, பூமியின்மேல் வரும் ஆபத்துக்குக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்து போயிற்று.”Mar 501.4

    இப்பொழுது வரப்போகும் அழிவைக்குறித்து, இந்த உலகம் எச்சரிக்கப்படும்வரை உலகில் நடைபெறவிருக்கும் சண்டைகளை தூதர்கள் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; ஆனாலும், பூமியின்மேல் மோதத்தக்கதாக கடும்புயல் ஒன்று ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. காற்றுகளை விட்டுவிடும்படி, தேவன் தமது தூதர்களுக்கு கட்டளையிடும்போது, எழுதுகோலால் விவரிக்க முடியாத, போராட்டக் காட்சிகள் வந்து சம்பவிக்கும். Mar 502.1

    மிகக்குறுகிய இடைவேளை ஒன்று தேவனால் நமக்கு கிருபையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அறியாமையில் அழிந்துகொண்டிருக்கிற ஜனத்திற்காகச் செய்யும்படி, நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற அனைத்துத் திறமைகளும் பயன்படுத்தப்பட வேண்டும்.⋆Mar 502.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 502.3

    “அவர்கள் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சந்தானமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கின்ற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம்பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்” - ஏசாயா 61:9.Mar 502.4