Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கொடிய வெப்பத்தினால் உருகிப்போகவிருக்கும் மூலப்பொருட்கள்!, அக்டோபர் 2

    “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.” - 2 பேதுரு 3:10.Mar 549.1

    கிறிஸ்துவின் நாளிலே, அவர் வருகைக்குச் சற்று முன்னதாக ஆண்டவர் வானத்திலிருந்து தமது கோபத்தினால் மின்னல்களை அனுப்புவார். அது பூமியிலிருக்கிற அக்கினியோடு சேர்ந்துகொள்ளும்; மலைகள் சூளையைப்போல எரியும்; அவைகளிலிருந்து பயங்கரமான எரிமலைக் குழம்புகள் வெளியேறி, கிராமங்களையும் பட்டணங்களையும் வயல்களையும் தோட்டங்களையும் அழித்துப்போடும். உருகிப்போன குழம்புகளையும் பெரிய கற்களையும் சூடேறின மண்ணையும் அவைகள் ஆறுகளிலே கொட்டும்போது, அதிலுள்ள தண்ணீர், பானையிலிட்ட நீரைப்போன்று பொங்கி, கொதித்து, பெரிய பெரிய பாறைகள், விவரிக்க முடியாத குமுறலோடு உடைந்த துண்டுகளை நிலத்தின்மீது சிதறியடிக்கும்; ஆறுகள் எல்லாம் வறண்டுபோகும்; பூமி அதிர்ந்து நடுங்கும்; ஆங்காங்கே பூமியதிர்ச்சிகளும் பயங்கரமான எரிமலை வெடிப்புகளும் உண்டாகும். பூமியின் குடிகளான துன்மார்க்கர் பூமியின் மீதிருந்து அழியும்வரை, அவர்களை தேவன் வாதிப்பார்.Mar 549.2

    குடிகாரனைப்போல பூமி தள்ளாடி, கூடாரத்தைப்போல பெயர்ந்து போகும். ஐம்பெரும் பூதங்கள் எல்லாம் தீயினால் உருகும். வானம் புத்தகத்தைப்போலச் சுருட்டப்படும்.Mar 549.3

    பூமியின் அடியிலே மறைத்துவைக்கப்பட்டிருந்த மூலகங்கள் வெடிப்பதினால், பூமியின் மேற்பரப்பு பிளந்துபோகும். தங்களுக்கு அடியில் வேலைசெய்தவர்களை பட்டினிபோட்டு, குவித்துவைத்த ஏராளமான உடைமைகள்மூலம் சேர்த்த சொத்துக்களை, இந்த மூலகங்கள் ஒரு முறை வெடித்து கட்டுதளர்வடையும்போது, அத்தனை செல்வங்களையும் துடைத்தொழித்துப்போடும்.Mar 549.4

    மிகப்பெரிய பேரழிவு செய்யும் பெரும் தீ நமக்கு சற்றுமுன்பாக இருக்கிறது. அந்தச்சமயத்தில் வாழ்வின் வீணான உழைப்பானது, ஒரு இரவிலும் பகலிலும் முற்றிலுமாக அடித்துச்செல்லப்படும்.Mar 550.1

    மனித உயிர்கள் அதிகம் சேதமாகும்; ஆனாலும், தேவன் ஆயத்தம்பண்னியிருந்த பேழையிலே ஜலப்பிரளயத்திலிருந்து நோவா காக்கப்பட்டதைப்போல, இந்த அழிவிலும், ஆபத்திலும் தம்மை நம்புகிறவர்களுக்கு ஆண்டவர் தாமே அடைக்கலமாயிருப்பார். சங்கீதக்காரன் மூலமாக: “எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால், பொல்லாப்பு உனக்கு நேரிடாது. வாதை உன் கூடாரத்தை அணுகாது”; “தீங்கு நாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து” (சங்கீதம் 91:9,10; சங்கீதம் 27:5) என்று நமக்கு வாக்குக் கொடுக்கிறார். அந்த ஆண்டவரை நமது நம்பிக்கையாக-பாதுகாப்பாக-நாம் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?Mar 550.2

    கிறிஸ்து தம்மை நேசிக்கிறவர்களுக்காக, மாளிகைகளை ஆயத்தஞ்செய்யச் சென்றிருக்கிறார்; அந்த மாளிகைகளுக்காக நாம் நம்மை ஆயத்தஞ்செய்து கொண்டிருக்க வேண்டும். உலகத்தின் போராட்டங்களிலிருந்து அங்கேதான் நமக்கு ஓய்வு உண்டு.⋆Mar 550.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 550.4

    “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.” - மத்தேயு 7:7,8.Mar 550.5