Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய மக்கள் விடுவிக்கப்படுகிறார்கள்!, செப்டம்பர் 27

    “…பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்.” - ஏசாயா 49:25.Mar 539.1

    தேவனுடைய நியாயப்பிரமாணத்தை கனம்பண்ணுகிற பிள்ளைகளுக்கு, மானிட சட்டங்கள் கொடுத்துவந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படும்போது, அவர்களை அழிக்கத்தக்கதாக, அதைப்போன்ற இயக்கங்கள், பல நாடுகளிலே, ஒரே நேரத்தில் செயல்படும். மரணச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட நேரம் நெருங்குகிறபொழுது, வெறுக்கப்பட்ட ஜனத்தை வேரோடு அழிக்க இரகசியத் திட்டங்கள் போடப்படும். ஒரு குறிப்பிட்ட இரவிலே, அவர்களைக் கடிந்துகொண்ட-அவர்களுக்கு எதிரிடையாகக் கூறிய குரல்களை, முற்றிலுமாக அமைதிப்படுத்தும்படிக்கு, ஒரே இரவில் ஒரு தீர்மானமான தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிடப்படும்.Mar 539.2

    சிறைச்சாலைகளிலும், காடுகளிலும், மலைகளிலும் உள்ள தனிமையான இடங்களில் ஒளிந்துகொண்டிருக்கிற தேவ மக்கள், தங்களைக் கொன்றுபோடத்தக்கதாக, தீய ஆவிகளால் ஏவப்பட்ட மனிதர்கள் எல்லா இடங்களிலும் ஆயுதந்தரித்தவர்களாக ஆயத்தப்படுகிற அந்த நேரத்திலும், பரலோகப் பாதுகாப்பிற்காக மன்றாடுவார்கள். அந்த நேரத்தில்தான் உச்சகட்ட ஆபத்திலே, இஸ்ரவேலின் தேவன் தாம் தெரிந்துகொண்டவர்களை விடுவிக்கும்படிக்கு இடைபடுவார்…Mar 539.3

    வெற்றிக் களிப்போடு, பரிகாசமான சாப வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு, ஆரவாரிக்கிற தீய மனிதர்களின் கூட்டங்கள் தங்கள் இரையின்மேல் பாய ஆயத்தமாகிற அந்த நேரத்தில் தானே, இதோ இரவின் இருளைக்காட்டிலும் அடர்த்தியான இருள் பூமியின்மேல் படிகின்றது; பின்பு, தேவனுடைய சிங்காசனத்தின் மகிமையோடு பிரகாசிக்கின்ற வானவில் வானம் முழுவதும் பரவிநின்று, ஜெபித்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு கூட்டத்தையும் சூழ்ந்துகொள்கிறது. மூர்க்கங்கொண்டிருந்த திரள்கூட்டாத்தார் திடீரென தடைசெய்யப்பட்டவர்கள்போன்று அப்படியே நிற்கிறார்கள். அவர்களுடைய பரிகாசக் குரல்கள் அடங்கிப்போயின. யாரைக் கொலைவெறியோடு தாக்கினார்களோ அவர்களை மறந்து விடுகிறார்கள்… பயம் நிறைந்தவர்களாக-வரப்போகும் இடர்குறித்து முன்னுணர்வு கொண்டவர்களாக-தேவனுடைய உடன்படிக்கையின் அடையாளத்தை உற்றுநோக்கி, தங்களால் ஏறெடுத்தும் பார்க்கக் கூடாதிருந்த அந்த பிரகாசத்தினின்று, தாங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று ஏங்கினார்கள்.Mar 539.4

    தேவனுடைய மக்கள், தங்களுக்கருகில் ஒரு தெளிவான-இனிமையான- “மேல் நோக்கிப்பார்” என்று கூறுகின்ற-ஒரு சத்தத்தைக் கேட்பார்கள். தங்கள் கண்களை வானங்களை நோக்கி ஏறெடுத்துப் பார்க்கும்போது, உடன்படிக்கையின் சின்னமாகிய வானவில்லைக் காண்கிறார்கள். ஆகாய விரிவை மூடியிருந்த-சீற்றத்தோடுகூடிய-கருத்த மேகங்கள் விலகிக்கொண்டன. ஸ்தேவானைப்போல, வானங்களிலே தேவனுடைய மகிமையையும், சிங்காசனத்திலே அமர்ந்திருக்கிற மனுஷகுமாரனையும் அவர்கள் திடமாக நோக்கிப்பார்க்கிறார்கள்.Mar 540.1

    உலகம் முழுவதும் இருளில் மூழ்கியிருக்கும்பொழுது, பரிசுத்தவான்களின் கூடாரங்களிலெல்லாம் வெளிச்சம் இருக்கும். கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையின் முதல் காட்சியை அவர்கள் காண்பார்கள்.⋆Mar 540.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 540.3

    “…உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.” - சங்கீதம் 91:11.Mar 540.4