Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அக்டோபர்

    சிலருக்காக மட்டுமே நிகழவிருக்கும் ஒர் தனிப்பட்ட உயிர்த்தெழுதல்!, அக்டோபர் 1

    “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.” - வெளிப்படுத்தல் 1:7.Mar 547.1

    அவரைக் குத்தினவர்களும், (வெளி. 1:7) கிறிஸ்துவின் மரணத்தின் கடுந்துயர்களை பரிகாசம்பண்ணினவர்களும், ஏளனம் செய்தவர்களும், அவருடைய மக்களையும் அவருடைய சத்தியத்தையும் மிகவும் கோபாவேசத்தோடு எதிர்த்தவர்களும், அவருடைய மகிமையையும் அவருக்கு உண்மையாகக் கீழ்ப்படிந்திருந்த மக்களுக்குக் கிடைக்கும் கனத்தையும் காணும்படியாக எழுந்திருப்பார்கள்.Mar 547.2

    கிறிஸ்துவிற்காக நியமிக்கப்பட்ட வழக்கு விசாரனையின்போது காய்பா தன் வலது கையை வானத்திற்கு நேராக உயர்த்தி, ஒரு பக்திவிநயமான சூளுரையோடு, இயேசுவை நோக்கி: “நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக்கேட்கிறேன்” என்றான்… (மத்தேயு 26:63).Mar 547.3

    காதுகளெல்லாம் கவனித்திருக்க, கண்களெல்லாம் அவர்மேல் பதிந்திருக்க, இயேசு: “நீர் சொன்னபடிதான்” என்றார். அன்றியும் மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்கள் (மத்தேயு 26:64) என்றார்; அப்போது, பரலோக ஒளி வெளுத்துப் போன அவருடைய முகத்தைப் பிரகாசிப்பித்தது.Mar 547.4

    ஒரு கணநேரம், கிறிஸ்துவின் தெய்வீகம் அவருடைய மானுடத்தில் பளிச்சிட்டது. ஊடுருவிப்பார்க்கின்ற இரட்சகரின் பார்வைக்குமுன், அந்தப் பிரதான ஆசாரியன் நடுங்கினான்… நித்திய நியாயாதிபதியின் முன்பாக தான் நிற்கிறதைப்போன்று ஒருகணம் உணர்ந்தான். எல்லாவற்றையும் காண்கிற அவருடைய கண்கள், அவனுடைய எண்ணங்களை வாசிப்பதுபோலவும், மரித்தவர்களோடு புதைந்துபோகவேண்டிய இரகசியங்களை அவர் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதைப்போலவும் உணர்ந்தான்.Mar 547.5

    பிரதான ஆசாரியனுடைய கவனத்திலிருந்து அந்தக் காட்சி மறைந்தது…தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,…தேவ தூஷணத்திற்காக அந்தக் கைதி தாண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தான். “இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது” (மத்தேயு 26:65) என்றான். எல்லாரும் அவரை மரண ஆக்கினைக்கு உட்படுத்தினார்கள்.Mar 548.1

    இவ்வாறாக, யூத அதிகாரிகள் தங்களுக்கான பங்கைத் தெரிந்துகொண்டார்கள். சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய கைகளில் வைத்திருந்த-யோவான் கண்ட-ஒருவரும் திறக்கக்கூடாத-அந்தப் புத்தகத்தில், அவர்களுடைய தீர்மானம் பதிவு செய்யப்பட்டது. அந்தப் புத்தகம் யூத இராஜசிங்கத்தால் உடைக்கப்படும் அந்த நாளிலே, அவர்கள் முன்பாகப் பழிவாங்குகிற நிகழ்ச்சியாக, அவர்கள் தெரிந்துகொண்டது வெளிக்காட்டப்படும்.Mar 548.2

    கிறிஸ்து இரண்டாம் முறை வரும்போது, பொல்லாதவர்கள் கூட்டம் சுற்றிவளைத்திருந்த ஒரு கைதியாக, அவரைக் காண மாட்டார்கள். அவரைப் பரலோகத்தின் இராஜாவாகக் காண்பார்கள்… அப்போது நியாயவிசாரணை மன்றத்திலே நடந்த நிகழ்ச்சிகளை ஆசாரியர்களும் அதிகாரிகளும் தெளிவாக நினைவுகூருவார்கள். நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அக்கினி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டதுபோல அவர்களுக்குக் காணப்படும்.⋆Mar 548.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 548.4

    “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது…” - 2 நாளாகமம் 16:9.Mar 548.5