Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஒவ்வொரு சந்தேகத்தையும் வேரோடு பிடுங்கு!, பிப்ரவரி 13

    “ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும் படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது... நாமோ கெட்டுப்போகப் ன்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.” - ஏபிரேயர் 10:35-39.Mar 87.1

    நாம் இப்பொழுது அசைக்கப்படும் காலத்திலிருக்கிறோம். சாத்தான் கிறிஸ்துவின் கையிலிருந்து ஆத்துமாக்களைப் பறித்து, அவரது பாதத்தின் கிழே மிதித்துப்போடத்தக்கதாக, தன் முழு வல்லமையோடும் கிரியைசெய்துகொண்டிருக்கிறான் என்பதை நான் கண்டேன்...Mar 87.2

    குணம் வளர்க்கபடுகிறது. தேவதூதர்கள் நமது ஆன்மீகத் தகுதியை நிறுத்துக்கொண்டுள்ளனர். தேவன் தமது மக்களை சோதித்து நிருபிக்கிறார். “சகோதரரே, நீங்கள் அவிசுவாதத்தின் தீய உள்ளத்தைக் கொண்டவர்களாயும், ஜீவனுள்ள தேவனை விட்டுப்பிரிந்துசெல்பவர்களாயும் இராதபடி அனுதினமும் விழித்திருங்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தித் தாக்குங்கள், அல்லது பாவத்தின் வஞ்சகத்தால் கடினப்பட்டுப் போவீர்கள். ஏனெனில், துவக்கத்தில் நாம் கொண்டிருந்த நம்பிக்கையை இறுதிவரை உறுதியாகப் பற்றிகொண்டிருப்பதினாலேயே நாம் கிறிஸ்துவில் பங்குள்ளவர்களாவோம்” என தூதனால் எனக்கு அறிவிக்கப்பட்டதுMar 87.3

    தேவ கிருபையின் மகத்துவத்தை அறிந்த அவரது மக்கள், அவிசுவாசமான வார்த்தைகளைப் பேசி, அதன்மூலம் பிசாசின் கருத்துகளை மற்றவர்களுக்குப் பரப்பும் கருவியாக தாங்கள் செயல்படுவதை தேவன் விரும்பவில்லை. அவிசுவாசம், தீமை ஆகிய விதைகள் விதைக்கப்பட்டபின், அவற்றைப் பிடுங்கி எறிவது எளிதல்ல. சாத்தான் ஒவ்வொரு மணிநேரமும், அதற்கு ஆதரவளித்து ஊக்கப்படுத்துவதால், அவைகள் ஒங்கிவளர்ந்து பலமுள்ளதாகிறது. விதைக்கபடுகின்ற நல்ல விதையானது உரம்போட்டு, நீர்பாய்ச்சி, நேர்த்தியாக கவனிக்கப்படவேண்டியது அவசியம்; ஏனெனில், அதன் வளர்ச்சியைத்தடுத்து, அதைச் சாகடிக்கும்வண்ணமாக, ஒவ்வொரு தீமையான செல்வாக்கும் அதன்மேல் படிகின்றது. தான் மற்றவர்களை வஞ்சிப்பதற்கு தனக்கு குறுகியகாலமே உள்ளது என்று சாத்தான் அறிந்திருக்கிறதால், அவனது முயற்சிகள் என்றுமே இல்லாத அளவிற்கு, மிகவும் அதிக வல்லமையுடன் இந்தக் காலங்களில் காணப்படுகின்றன...Mar 87.4

    தானிய மணியிலிருந்து பதர் பிரிக்கப்படும்வரை தானியம் சுளகினால் புடைக்கப்படுவது போல, தேவ மக்கள் புடைக்கப் படுவார்கள். நாம் கிறிஸ்துவை முன்னுதாரணமாகக்கொண்டு, அவரது தாழ்மையின் அடிச்சுவடுகளை பின் பற்றவேண்டும்...Mar 88.1

    பரிசுத்தர்களின் வெகுமதியாகிய, நித்திய சுதந்திரம் எனக்குக் காண்பிக்கப்பட்டது. பின்பு, தேவ மக்கள் சத்தியத்தின் நிமித்தம் எவ்வளவாக பாடனுபவித்தனர் என்பதும் எனக்குக் காட்டப்பட்டது. அவர்கள் பரலோகத்தை மிகவும் எளிதாகவே பெற்றுக்கொண்டதாகவே கருதினர். அவர்கள் இக்காலத்தின் பாடுகளை, பரலோகத்தின் மகிமையோடு ஒப்பிட முடியாது என உணர்ந்திருந்தனர். இந்த நாட்களில் தேவ மக்கள் சோதிக்கப்படுவர்; ஆனால், சீக்கிரம் அவர்களது சோதனைகள் முடிவுக்கு வரும்; பின்பு அவர்கள் நித்திய ஜீவனாகிய பரிசைப்பெற்றுக்கொள்வார்கள்.Mar 88.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 88.3

    “உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” - ஏசாயா 26:3.Mar 88.4